Homeஆன்மீகம்திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டப்பட்டது

திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டப்பட்டது

திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டப்பட்டது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த பால் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

பாடல் பெற்ற தலங்களில் அளவில்லா சிறப்புடையது திருவண்ணாமலை. சிவபிரான் ஒவ்வோர் காரணம் பற்றிக்கொண்டருளிய உருவத் திருமேனிகள் இருபத்தைந்து. அருவுருவத் திருமேனியான சிவலிங்கமோ மேற்கூறிய வகையினின்றும் வேறுபட்டது. ஆகவேதான் வழிபாட்டிற்குரிய சிறந்த வடிவமாகச் சிவலிங்கத் திருமேனி கொள்ளப்பட்டுள்ளது. இம்முறையில் அருவுருவ வடிவமான திருவண்ணாமலையை இறைவன் திருவுருவமாகவே அருளாளர்களால் போற்றப் பெறுகிறது. ‘சோணாசலத்தின் மிக்க ஷேத்திரமில்லை சோமவாரத்தின் மிக்க விரதமில்லை’ என்னும் பழமொழியும் இதுபற்றியே எழுந்துள்ளது.

தேவராப் பாடல் பெற்றதில் நடுநாட்டு தலமாக திருவண்ணாமலை திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் நால்வர் என்றழைக்கப்படும் அப்பர்¸ சுந்தரர்¸ திருஞானசம்பந்தர்¸ மாணிக்கவாசகர் ஆகியோர் தேவாரம் பதிகங்களை பாடியுள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் 2வது பிரகாரத்தில் நடராஜருக்கு அருகே நால்வர் சன்னதி அமைய பெற்றுள்ளது.

திருஞானசம்பந்தர் குழந்தையாக இருந்த போது சீர்காழியில் சிவகங்கையில் அவரது தந்தை பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது பசியால் அழுத திருஞானசம்பந்தர் முன்பு அம்பாள் தோன்றி தங்க கிண்ணத்தில் அவருக்கு ஞானப்பால் புகட்டினார். சிறிது நேரத்தில் அங்கு வந்த அவரது தந்தை¸ திருஞானசம்பந்தரின் உதட்டிலிருந்து பால் வழிந்ததை பார்த்து யார் பால் புகட்டியது¸ பொய் சொல்லாமல் சொல் என கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அம்பாள் காட்சியளித்தார். திருஞானசம்பந்தரும் ஞானம் பெற்றார்.

திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டப்பட்டது
திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டப்பட்டது
திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டப்பட்டது

இந்த ஐதீக நிகழ்ச்சி சிவாலங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலையிலும் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமி¸ அம்பாள்¸ திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேகம்¸ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பிறகு சிவகங்கை குளக்கரையில் திருஞானசம்பந்தர் எழுந்தருளினார்.

See also  குளம் ஆக்கிரமிப்பு-அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை

தொடர்ந்து அம்மன் சன்னதியிலிருந்து மேளதாளம் முழங்க 2 குடங்களில் பால் எடுத்து வரப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க அதிலிருந்து பால் எடுத்து திருஞானசம்பந்தருக்கு ஊட்டப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா” என பக்தி முழக்கமிட்டனர். பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக பால் வழங்கப்பட்டது.


ஈடு இணையில்லாத அதிசய அற்புதச் சிவ மைந்தர்

திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டப்பட்டது

ஒவ்வொரு ஊழியிலும் பரம சிவனால் படைக்கப்படுபவர்கள் ஆறு பதவியில் உள்ள அரி அயன் ருத்திரன் சக்தி லட்சுமி சரஸ்வதி ஆகிய தெய்வங்கள். இந்த ஊழிக் காலத்தில்  பைரவர்  விநாயகர்  வீரபத்திரர் முருகன் ஆகியோர் முறையே பிரம்மன்,கஜமுகாசுரன், தட்சன், சூர பதுமன் நேரே பரமேசுவரனால் தோற்றுவிக்கப்பட்டு சிவ மைந்தர்களாக வாழ்பவர்கள். இந்த மண்ணுலகில்  மானிடர்க்குப் பிறந்து வந்து சிவ மைந்தர்களாக வாழ்ந்தவர்கள் சண்டீசரும், திருஞான சம்பந்தரும் ஆவர்.

பெரிய புராணம் முழுவதும் சேக்கிழார் பெருமான் சிவ மைந்தர் என்றே சம்பந்தரைப் போற்றுகிறார்.  கிண்ணம் பால்  வேண்டிய  உபமன்னியு  முனிவருக்காகப் பெருங்கருணைத் தாயுமானவர்  பாற்கடலையே அனுப்பி வைத்தார். சீர்காழி பிரம்ம புரீசுவரர் திருக்கோயிலில் புனிதக் குளக் கரையில் சம்பந்தருக்குப் பரமன் ஒரு பாகம் பெண்மை உடைய அலிப் பெருமானாய் அம்மையப்பனாய் நந்தி வாகனத்தில் வந்து தங்கக் கிண்ணத்தில் பசும்பால் சாதம் ஊட்டி அருளினார். பெண்ணாலோ ஆணாலோ அல்லாமல் பால்வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட சிவபரம் பொருளான தோடுடைய செவியனால இருபாலீசரால் ஆட்கொள்ளப்பட்டவர் சம்பந்தர்.

🌺 திருக்கோலக்கா சப்த புரீஸ்வரர் கோயிலில் பிஞ்சுக் கரங்களால் தாளமிட்டுப் பாடிய போது ஓசையொலி நாயகன் பாடலுக்கு ஏற்றவாறு தானே ஒலிக்கும் தங்கத் தாளங்களை அருளிச் செய்தார்.

See also  தென்கைலாயம் எனப்படும் பருவதமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது

🌺 ஞான பாலகர் பிஞ்சுக் கால்களால் நடந்து வந்தபோது  திருநெல்வாயில் அரத்துறை நான்மறை நாயகன் முத்துப் பல்லக்கை அருளினார்.

🌺 உச்சி வெய்யிலில் வந்த போது பட்டீசுவரம் தேனுபுரீசுவரர் முத்துப் பந்தல் அருளிச் செய்தார்.

🌺 திருவாவடுதுறை  கோமுக்தீஸ்வரர் கோயிலில் பொன்னார் மேனியன் எடுக்க எடுக்கக்  குறையாத ஆயிரம் பொற்காசுகளை அருளிச் செய்தார்.

இவ்வாறு

தாயு நீயே தந்தை நீயே¸

பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன்

என பரம்பொருள் வாழ்நாள் முழுவதும் சம்பந்தருக்குத் தாய் தந்தையாய் இருந்து  தக்க  சமயத்தில் தேவையானவற்றைத் தானே அருள்  புரிந்துள்ளார்.

🌺 திருவீழிமிழலை வீழிநாதர் கோயிலில் தெய்வ பாலகருக்குத் தியாகேசன் சிறப்பான புதுக் காசு அருளிய போது கறை படிந்த பழைய காசுகளை அருளுமாறு வேண்டிப் பெற்று மடம் அமைத்து மக்களின் பசியைப் போக்கினார். எல்லோரும் அன்னதானம் செய்ய வேண்டும் என்பதற்காகவே  மழை பொழிவிக்காமல் மடம் அமைத்து உணவிட்டனர்.

🌺 திரு ஆமாத்தூர் அழகியநாதர் கோயிலில் ஈசனைப் பாடிப் பெருஞ் செல்வம் பெறச் செய்து  சிவாச்சாரியாரின் வறுமையை நீக்கினார்.

🌺 செய்யாறில் (திருவோத்தூர்) ஆண் பனை மரங்களைப் பெண் பனை மரங்கள் போல் குலை தள்ளச்  செய்து அடியாரின் மன வருத்தம் போக்கினார்.

🌺 திருக்கொள்ளம்புதூரில் படகு ஓட முடியாத பெரு வெள்ளத்தில் செலுத்துவார் இல்லாமல் துடுப்பு இல்லாமல்  ஓடம்  ஓடச்  செய்து மக்களைக் கரை சேர்த்தார்.

See also  327 மாணவிகள் பங்கேற்ற பரத நாட்டிய நிகழ்ச்சி

🌺 மாதவப் புதல்வரான திருஞான சம்பந்தர் திருச்சிராப்பள்ளிக்கு அருகேயுள்ள திருவாசி (திருப் பாச்சிலாச் சிராமம்) மணிகண்டர் கோயிலில் கொல்லி மழவன் என்ற வேந்தன் மகளுக்கு உண்டான முயலகன் என்ற தீராத முடக்கு வாத நோயைத் தீர்த்து வாழ்வித்தார்.

🌺 திருச்செங்கோடு எனப்படும் கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்கும் ஊர் மக்களுக்கும் ஏற்பட்ட காய்ச்சல் நோயைப் போக்கியருளி நலமடையச் செய்தார்.

🌺 திருமருகல் என்ற தலத்தில் பாம்பு தீண்டி இறந்து போன வணிக மகனை சஞ்சீவினி மூலிகையோ பர்வதமோ இல்லாமல் மீண்டும் உயிரோடு எழுப்பிக் கொடுத்து வாழ வைத்தார்.

🌺 மதுரையில் பாண்டியனது வெப்பு நோயைப் போக்கிப் பிறவிக் கூனையும் நிமிர்த்தி வளைந்திருந்த ஆட்சியையும், நீதியையும் நிமிர்த்தினார். சிவ நாமம் தாங்கிய ஏடுகளை நெருப்பில் இட்டுப் பசுமையாக எடுத்தும் நதியில் இட்டுக் கரை சேர்த்தும் சிவ நாம மகிமையை தமிழின் பெருமையைப் புலப்படுத்தினார்.

🌺 திரு மயிலையில்  எலும்பிலிருந்தும் சாம்பலிலிருந்தும் பூம்பாவையை மீண்டும் உயிருடன் தக்க வளர்ச்சியோடு வரவழைத்து வாழ வைத்தார்.

🌺 பறந்து செல்லும் ஆற்றல் உட்படப் பல சித்திகளைப் பெற்றிருந்த போதும் மக்களோடு மக்களாகக் கூடியிருந்து தொண்டு புரிந்தார்.

சீர்காழியில் கௌணிய கோத்திரத்தில் சிவ பாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் திருஞான சம்பந்தர் திரு அவதாரம் செய்த திருநாள் திருவாதிரை. அவர் அருட்பெருஞ்சோதியில் கலந்து முக்தி பெற்ற  நாள் வைகாசி மூலம்.

நன்றி- சிவப்பிரியா

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!