Homeஅரசு அறிவிப்புகள்கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு நேர்காணல்

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு நேர்காணல்

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதிவிக்கு நேர்காணல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் வருகிற 29.04.2022-ந் தேதி முதல் 11.05.2022-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த நேர்காணலுக்கு அழைப்பு கடிதம் கிடைக்காதவர்கள் செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். 

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸ 

கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் திருவண்ணாமலை¸ கால்நடை பெருமருத்துவமனை வளாகத்தில் வருகிற 29.04.2022-ந் தேதி முதல் 11.05.2022-ந் தேதி வரை (ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நீங்கலாக) தினமும் காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை நடக்கிறது. 

அசல் சான்றுகளுடன் 

தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்முக அழைப்பாணை தனியே தபாலில் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள நாளில் அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகளுடன் விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

அனுமதி மறுப்பு 

விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்புக்கடிதம் கிடைக்கப்பெறவில்லை என்றால்¸ அவர்கள் தகுந்த விண்ணப்பம் செய்த ஆதாரங்களுடன் திருவண்ணாமலை¸ கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

நேர்முக அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்முகத் தேர்வு வாளகத்தினுள் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த நேர்காணல்  ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் அறிவித்துள்ளார். 

See also  ஐ.டி.ஐயில் 50 % இட ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பிக்கலாம்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!