Homeஅரசியல்மின் தடைக்கு மத்திய அரசை பழி சொல்வதா? அன்புமணி

மின் தடைக்கு மத்திய அரசை பழி சொல்வதா? அன்புமணி

மின் தடைக்கு மத்திய அரசை பழி சொல்வதா? அன்புமணி

தமிழகத்தில் நிலவும் மின்தடைக்கு மத்திய அரசு மீது பழி சுமத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என திருவண்ணாமலையில் அன்புமணி ராமதாஸ் கூறினார். 

👉தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக்கிட திட்டமிடவில்லை எனவும் குற்றச்சாட்டு

👉ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு சட்டம் இயற்ற வலியுறுத்தல் 

👉நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ரோடை மோசமாக வைத்திருப்பது  ஏன்?என கேள்வி

மின் தடைக்கு மத்திய அரசை பழி சொல்வதா? அன்புமணி

திருவண்ணாமலை வேங்கிக்காலில் குமரன் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை தெற்கு மற்றும் மேற்கு ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் ஏந்தல் பெ.பக்தவச்சலம் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர்கள் இரா.காளிதாஸ்¸ அ.வே.பிரசாத்¸ மேற்கு மாவட்ட தலைவர் இரா.பரமசிவம்¸ முன்னாள் மாவட்ட பொருளாளர் சௌ.வீரம்மாள்¸ மாநில மகளிரணி ஜெ.கஸ்தூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலாளர் இல.பாண்டியன் அனைவரையும் வரவேற்றார். 

பொதுக்குழு கூட்டத்தில் பாமக மாநில இளைஞர் சங்க தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி பேசியதாவது 

புதிய உத்வேகத்துடன் எழுச்சியுடன் இளைஞர்கள் வருகை தந்துள்ளனர். ஒரு காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தை விட திருவண்ணாமலை மாவட்டத்தில் பாமக பலமாக இருந்தது. அது தொய்வடைந்தது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. இன்று கூடிய கூட்டத்தை பார்த்ததும் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த அதே உற்சாகம் மீண்டும் வந்துள்ளது. விரைவில் இம்மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். பொறுப்பு இல்லை என தொண்டர்கள் வருத்தப்படக் கூடாது. பொறுப்பு கிடைக்கும். இது ஒரு சுழற்சி தான். எனவே அனைவரும் ஒருங்கிணைந்து பாட்டாளி மக்கள் கட்சியை முதன்மை கட்சியாக்கிட பாடுபட வேண்டும். இதற்காக பிஎம்கே 2.0 என்ற ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த போகிறோம். 

பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பித்து 32 ஆண்டுகள் ஆகிறது. 42 ஆண்டு காலம் டாக்டர் ராமதாஸ்  பொது வாழ்க்கையில் லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டங்களை நடத்தி பல்வேறு சாதனைகளை செய்து இருக்கிறார். ஆட்சி அதிகாரம் ஒரே ஒரு முறை தந்தால் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்போம். பாட்டாளி மக்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. நல்ல திட்டங்களை இவர்கள் வைத்திருக்கிறார்கள் என்ற பேச்சு உள்ளது. அது வாக்குகளாக மாற வேண்டும்.

மின் தடைக்கு மத்திய அரசை பழி சொல்வதா? அன்புமணி

அய்யா பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடலாம். ஆனால் வேறு கட்சியில் மந்திரி வீட்டு வாசலில் வாட்ச்மேனாக நிற்க வேண்டும். எங்க போனாலும் நன்றாக இருங்கள்¸ நன்றாக சம்பாதியுங்கள்¸ குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்¸ ஆனால் எங்களுக்கு வேறு வேலை இருக்கிறது. அது தமிழகத்தை¸ திருவண்ணாமலை மாவட்டத்தை முன்னுக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான்.

திருவண்ணாமலை மாவட்டம் வளர்ச்சி அடையவில்லை.தொழில் வாய்ப்புகள் இங்கு இல்லை.வானம் பார்த்த பூமிதான். விவசாயத்தை நம்பி மக்கள் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தை வளம் பெற வைக்க எத்தனையோ திட்டங்கள் எங்களிடம் உள்ளது. பாலாறு – தென்பெண்ணை ஆற்றை இணைக்க வேண்டும். இதை முதல்முதலில் சொன்னது பாட்டாளி மக்கள் கட்சிதான். நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும். படித்தவர்கள் வேலை தேடி பெங்களுர்¸ சென்னை செல்லும் நிலை உள்ளது. இதை எல்லாம் மாற்றிட வேண்டும். இப்பகுதியில் அமைக்க உள்ள சிப்காட் முழுக்க முழுக்க விவசாய நிலங்களில் அமைக்கப்படுகிறது. சிப்காட் தொழிற்சாலை வேண்டும். ஆனால் விவசாய நிலங்களை அழித்து அதை அமைப்பதற்கு பதில் அரசு நிலம்,தரிசு நிலங்களில் அமைக்க வேண்டும். 

மின் தடைக்கு மத்திய அரசை பழி சொல்வதா? அன்புமணி

நமது தொண்டர்கள் ஊர் ஊராக செல்ல வேண்டும். அனைத்து கிராமங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி கொடி பறக்க வேண்டும். எல்லா சமுதாய மக்களும் நம்மை நோக்கி வரவேண்டும். பிரச்சனை¸  தகராறுக்கு செல்ல வேண்டாம். உங்களுக்கு பிரச்சனை வந்தால் அன்புமணி சும்மா இருக்க மாட்டான். முதலில் படியுங்கள்¸ வேலைக்கு செல்லுங்கள்¸ குடும்பத்தை காப்பாற்றுங்கள். அதற்குப் பிறகு கட்சிக்கு வாருங்கள். ஒன்று சேர்ந்து தமிழ் நாட்டை முன்னேற்றுவோம். 

ஒருமுறை பாமகவுக்கு ஆட்சிப்பொறுப்பை வழங்கினால் 80 சதவீத பிரச்சனைகளை சுலபமாக தீர்த்து விடலாம். யூரியா விலை மூன்று மடங்கு உயர்ந்துவிட்டது. யூரியா வாங்கினால் இன்னொரு பொருள் வாங்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார்கள். இதனால் நானூறு¸ ஐநூறு ரூபாய்க்கு விவசாயிகளுக்கு கூடுதலாக செலவாகிறது. கட்டாயப்படுத்தி விற்க கூடிய பணம் எங்கு யாரிடம் செல்கிறது? அரசுக்கு செல்கிறதா? அரசியல்வாதிக்கு செல்கிறதா அல்லது அமைச்சருக்கு செல்கிறதா? இதை நிறுத்த வேண்டும் இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் நடக்கும். 

10.5 சதவீத இட ஒதுக்கீடு நமக்கு விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே போராட்டத்திற்கு அவசியம் இருக்காது. புதிதாக அக்னிகுண்டம் தயார் செய்யுங்கள். நாயுடு மங்கலத்தில் அகற்றப்பட்ட இடத்தில் நானே வந்து வைக்கிறேன். நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் ஆனால் தேர்தல் அன்று அவர்கள் கையில் ஆயிரம்¸ இரண்டாயிரம்¸  மூவாயிரம்¸ ஐயாயிரம் என பணம் கொடுக்கப்பட்டு விடுகிறது. இந்த மாவட்டத்தில் பெரிய ஜாம்பவான்கள்¸ பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் உள்ளனர். தேர்தல் வந்தாலே பணத்தைத் தவிர வேறு ஏதும் தெரியாது. அதையெல்லாம் நாம் முறியடிக்க வேண்டும். 2026ல் பாமக ஆட்சி அமைய உத்வேகத்துடன் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

மின் தடைக்கு மத்திய அரசை பழி சொல்வதா? அன்புமணி

பிறகு அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது 

குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளது¸ இங்குள்ள அரசு மருத்துவமனையில் குடிநீர் இல்லை. செஞ்சியில் இருந்து வரும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏன் இந்த சாலையை சரி செய்யவில்லை? தேசிய நெடுஞ்சாலை என தட்டிக் கழிக்காமல் அதிகாரிகளை அழைத்து பேசி சரி செய்ய முன்வர வேண்டும் அண்ணாமலையார் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதை நினைவில் கொள்ள வேண்டும். சாலைகளை மேம்படுத்த வேண்டும். நீட் தேர்வு குழப்பத்தில் மாணவர்கள் உள்ளனர். எனவே சட்ட மசோதாவை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பி நீட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இது ஒட்டுமொத்த தமிழக மக்களின் கருத்தாக உள்ளது. 

ஆன்லைன் சூதாட்டம் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதனால் தற்கொலை¸ கொலைகள் நடக்கிறது. எனவே தமிழக அரசு சட்டம் இயற்றி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக எப்போதோ வந்து இருக்க வேண்டும். தமிழகத்திற்கு கோடைகாலத்தில் 18 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை என்ற நிலையில் 4500 மெகாவாட் உற்பத்தி தான் மாநில அரசு செய்து கொண்டிருக்கிறது. மீதி மத்திய அரசு தொகுப்பிலிருந்தும்¸  தனியார் நிறுவனத்திடமிருந்தும் வாங்குகின்றனர்.எட்டு மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. இது விரைவில் சரி செய்யப்பட்டு விடும் என்று மந்திரி சொல்வதை நம்ப முடியாது. சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பை அதிகரிக்க வேண்டும். 

தமிழ்நாட்டில் நிலவும் மின் தடைக்கு மத்திய அரசு மீது பழி சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே சரியான திட்டமிடுதல் வேண்டும். தமிழ்நாட்டில் போதை பழக்கம் அதிகரித்துள்ளது. மாணவிகள் குடிப்பதை பார்த்தால் வயிறு எரிகிறது. 42 வருடங்களாக மதுவை ஒழிக்க வேண்டும் என ராமதாஸ் போராடி வருகிறார். இந்த தலைமுறையைக் காப்பாற்ற முடியாது. அடுத்த தலைமுறையையாவது காப்பாற்ற வேண்டும். தேர்தல் நேரத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என ஸ்டாலின் கூறினார் இப்போது அரசின் நிலை என்ன என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும். திருவண்ணாமலை அருகில் உள்ள பாலியப்பட்டு கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விவசாயத்தை அழித்து சிப்காட் பூங்கா அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் கங்காதரன்¸ முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சி.எம்.பழனி¸ இரா.ஜானகிராமன்¸ பி.கே.எஸ்.செந்தில்குமார்¸ ப.குமரேசன்¸ முன்னாள் மாவட்ட தலைவர்கள் கு.சேட்டு¸ த.ஏழுமலை¸ இரா.தனுஷ்கோடி¸ அ.ஆதிமூலம்¸ ஜெ.லூர்துராஜ்¸ உ.சாமிநாதன்¸ ப.சம்பத்¸ நகர செயலாளர் சி.உதயராகவ்¸ பேரூராட்சி செயலாளர்கள் ப.ராஜசேகரன்¸ ஏ.சி.ராஜேந்திரன்¸ கி.ஜான்சுந்தர்¸ ஒன்றிய செயலாளர்கள் அ.கனகராஜ்¸ ஆ.ஆனந்தன்¸ செ.ராஜ்குமார்¸ வே.அய்யனார்¸ ரா.செல்வம்¸ ப.கிருஷ்ணன்¸ க.குணசேகரன்¸ வே.அய்யப்பன்¸ ரா.கணபதி¸ கா.சம்பத்¸ ப.முருகன்¸ க.ஏழுமலை¸ ர.பாலாஜி¸ ஜெ.சரவணன்¸ மா.மகேந்திரன்¸ பெ.திருமலை¸ வன்னியர் சங்க நிர்வாகிகள் க.நாராயணசாமி¸ பா.முருகன்¸ உள்பட மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

முடிவில் திருவண்ணாமலை நகர செயலாளர் செ.பத்மநாப நாயுடு நன்றி கூறினார்.

See also  ராகு காலத்தில் பா.ஜ.க வேட்பாளர் மனு தாக்கல்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!