Homeசெய்திகள்மாடி வீடு உள்பட 17 வீடுகளை இடிக்கும் பணி

மாடி வீடு உள்பட 17 வீடுகளை இடிக்கும் பணி

திருவண்ணாமலையில் 14 மாடி வீடுகள் உள்பட 17 வீடுகளை இடிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் நடந்தது.

அழுது புரண்ட பெண்கள்

பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் 365 குளங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. காலப்போக்கில் இந்த குளங்கள் எல்லாம் காணாமல் போய் விட்டன. தற்போது 150க்கும் குறைவாகவே குளங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கிரிவலப்பாதையில் குளம் இருந்த இடம் அரசு கட்டிடமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை உழவர் சந்தை அருகே உள்ள பொருளாம்குளம், காந்தி நகர் அருகே சக்தி விநாயகர் கோயில் அருகில் உள்ள வேடியப்பன் குளம், பிள்ளைகுளம் ஆகிய மூன்று குளங்களுக்கு சொந்தமான பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சிலர் தொடர்ந்த வழக்கில் அந்த ஆக்கிரமிப்புகளை இடித்து அப்புறப்படுத்தி வருகிற 1ந் தேதி அறிக்கை தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல் மேற்பார்வையில் தாசில்தார் எஸ்.சுரேஷ் தலைமையில் வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகள் இன்று போலீசாருடன் சென்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

See also  கலெக்டர் கேட்டதால் கடையடைப்பு- வியாபாரிகள் சங்கம்

உழவர் சந்தை அருகே உள்ள பொருளாம்குள பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள 3 வீடுகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் மாற்று இடம் வழங்கி விட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர். அப்பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி புல்டோசர் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வேடியப்பன் குளம் மற்றும் பிள்ளை குளம் ஆகிய பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்ற அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த குளங்களைச் சுற்றி 74 வீடுகள் இருந்ததாகவும், நீண்ட காலமாக குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க கருணாநிதி முதல்வராக இருந்த போது கொண்டு வரப்பட்ட சட்டத்தின் காரணமாக அந்த வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடும் எதிர்ப்பு

இந்நிலையில் பட்டா வழங்கப்படாத ஓரடுக்கு, 2 அடுக்கிலான மாடி வீடுகள் 14ம், 2 ஓட்டு வீடு, 1 கூரை வீடு என 17 வீடுகளை இடிக்க அதிகாரிகள் சென்ற போது கடும் எதிர்ப்பு கிளம்பியது. இங்கிருந்து நாங்கள் காலி செய்ய முடியாது பல ஆண்டுகளாக இங்கேயே வாழ்ந்து வருகிறோம் என எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சில பெண்கள் ரோட்டில் அழுது புரண்டனர்.

See also  தி.மலை கோயிலில் மாடர்ன் சாமியார் பவித்ரா காளிமாதா

ஆக்கிரமிப்பில் நாங்கள் இருக்கிறோம் என்றால் எங்களிடம் குடிநீர் வரி, வீட்டு வரி வாங்கியது ஏன்? என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்காகத்தான் வீடு, வீடாக சென்று ஓட்டு கேட்டோமா? என திமுக கவுன்சிலர்களை பார்த்து கேட்டனர். இது கோர்ட்டு உத்தரவு, எங்களால் என்ன செய்ய முடியும்? என அதிகாரிகளும், கவுன்சிலர்களும் கூறினர். பிறகு போலீசார் அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். நீண்ட நேரமாக அவர்கள் கோஷம் போட்டுக் கொண்டே நின்றிருந்தனர்.

IMG-20220829-WA0090.jpg

சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், திமுக, கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், நகரமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டதிலிருந்து 45 நாட்கள் அவகாசம் அளித்திட வேண்டும் என்ற நிலையில் கடந்த 21ந் தேதி நோட்டீசை வழங்கி விட்டு 1வாரத்திற்குள் வீட்டை இடிக்க வரலாமா? என பாதிக்கப்பட்டவர்கள் ஆவேசத்துடன் கேட்டனர்.

தொடர்ந்து பொதுமக்களின் எதிர்ப்புக்கிடையே வேடியப்பன் குளப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!