Homeஅரசு அறிவிப்புகள்தினம் 1000 ரூபாயுடன் அரசு குழந்தை இல்லத்தில் வேலை

தினம் 1000 ரூபாயுடன் அரசு குழந்தை இல்லத்தில் வேலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு குழந்தைகள் இல்லத்தில் தினம் ரூ.1000 ஊதியத்துடன் ஆற்றுப்படுத்துநர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

இன்றைய கால கட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு தன்னம்பிக்கை என்பது அவசியமான ஒன்றாகி விட்டது. அதை அவர்களுக்கு ஏற்படுத்தி அவர்களது மன அழுத்தத்தை போக்கிட உளவியல் வல்லுநர்களின் தேவை முக்கியமானதாகும். உளவியல் படித்தால் உலகெங்கிலும் வேலை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கேற்றாற்போல் தமிழக அரசும் பள்ளிக்கே சென்று மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க குழு ஒன்றை அமைத்துள்ளது.

இந்நிலையில் அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு உளவியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு அரசு, சமூகப் பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் 36 அரசு இல்லங்களில் (வால்டாக்ஸ், தர்மபுரி, சேலம், பெத்தநாயக்கன்பாளையம், தூத்துக்குடி, தென்காசி தவிர்த்து) தங்கி பயிலும் குழந்தைகளுக்கு ஆற்றுநர்கள் மூலம் ஆற்றுபடுத்துதல் (வழிப்படுத்துதல்) சேவை வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்கள் 3 (ஒருவர் பெண் பணியாளர்) மதிப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுபடுத்துதல் ஆகிய கல்வியில் முதுகலை பட்டம் பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் உரிய சான்றின் ஒளி நகலுடன் 15 நாட்களுக்குள் கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்கள் கொண்ட தேர்வுக் குழு மூலம் நடைபெறும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

See also  10 நாட்களுக்கு மாலை 5 மணிக்கு மேல் கடைகள் மூடப்படும்

தேர்வு செய்யப்படும் ஆற்றுபடுத்துநர்களுக்கு வருகையின் மதிப்பூதிய அடிப்படையில் சேவை வழங்க ஒரு வருகைக்கு நாள் ஒன்றுக்கு போக்குவரத்து செலவு உட்பட ரூ.1000 (ரூபாய் ஆயிரம் மட்டும்) வழங்கப்படும். மேலும் விவரம் வேண்டுவோர் சம்மந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், திருவண்ணாமலை அவர்களை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
வட்டாட்சியர் அலுவலக வளாகம்,
திருவண்ணாமலை -606 601. தொலைபேசி எண்: 04175 -223030

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!