Homeஅரசு அறிவிப்புகள்திருவண்ணாமலை:கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு

திருவண்ணாமலை:கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு

திருவண்ணாமலை:கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் வேலை வாய்ப்புக்கு முக்கிய கல்வித்தகுதியான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான விண்ணப்பம் பெற கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,

திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வேலை வாய்ப்புக்கு முக்கிய கல்வித்தகுதியான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி (Diploma in Co-operative Management) முழுநேர வகுப்புக்கான சேர்க்கை விண்ணப்பம் பெறுவதற்கு 29.07.2022 முதல் 18.08.2022 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நேரில் கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 22.08.2022 அன்று மாலை 5.30 மணிக்குள் இணைப்புகளுடன் மீள சமர்ப்பிக்கலாம்.

திருவண்ணாமலை:கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு

கல்வித்தகுதி :

மாணவ- மாணவிகள் கேர்க்கைக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி- மேல்நிலைப்பள்ளி ((+2) (10+2 முறையில்) தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் +2 தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளும் (10+2+3) விண்ணப்பிக்கலாம்.

See also  குரூப் 2¸-2A¸குரூப் 4க்கு அரசு சார்பில் இலவச பயிற்சி

வயது வரம்பு :

பயிற்சியில் சேருவதற்கு 01.08.2022 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குரிய இடஒதுக்கீடு வழங்கப்படும்.

1 வருட காலத்தில் 3 சான்றிதழ்கள் :

1 வருட காலத்தில் 2 பருவ முறையில் (Semester : 2) நடைபெறவிருக்கும் இப்பயிற்சியின் முடிவில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யக்கூடிய கூட்டுறவு மேலாண்மை பட்டய சான்றிதழ், MS-Office கணினி பயிற்சி சான்றிதழ் மற்றும் நகை மதிப்பீடு சான்றிதழ் ஆகிய மூன்று சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பயிற்சிக் கட்டணம் :

இப்பயிற்சியில் சேர பயிற்சிக்கட்டணம் ரூ.18,850 ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையம், 204, திண்டிவனம் சாலை, கீழ்நாச்சிப்பட்டு அஞ்சல், திருவண்ணாமலை, தொலைபேசி எண். 04175 – 254793 என்ற முகவரிக்கு கூரியர்,பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் என தெரிவித்துகொள்ளப்படுகிறது.

இவ்வாறு மண்டல இணைப்பதிவாளர் கூறியிருக்கிறார். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!