Homeஅரசியல்வேட்டவலம் அதிமுக நகர செயலாளர் செல்வமணி கைது

வேட்டவலம் அதிமுக நகர செயலாளர் செல்வமணி கைது

வேட்டவலம் அதிமுக நகர செயலாளர் செல்வமணி கைது

திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் பேரூராட்சி அலுவலகத்தில் திமுகவைச் சேர்ந்தவரை தாக்கிய வழக்கில் நகர அதிமுக செயலாளர் கைது செய்யப்பட்டார். 

திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் நகர அதிமுக செயலாளராக இருப்பவர் செல்வமணி. வேட்டவலம் திமுக வட்டக் கழக செயலாளராக இருப்பவர் மணிவண்ணன். இருவருக்குமிடையே இடம் சம்மந்தமாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. 

2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் செல்வமணிக்கு கீழ்பென்னாத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் நிற்பதற்கு ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார். இத் தேர்தலில் அவர் திமுகவைச் சேர்ந்த பிச்சாண்டியிடம் தோல்வியடைந்தார். இருந்தாலும் நகர செயலாளர் பதவியில் நீடித்து வந்தார். 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வேட்டவலம் அகஸ்தீஸ்வரர் கோயில் கடைகள் ஏலம் விடப்பட்ட போது¸ இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் உமாவுக்கும்¸ செல்வமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பெண் அதிகாரி உமா அழுது கொண்டே கோயிலிருந்து வெளியேறிய வீடியோ சமூக வலைத்தலங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது சம்மந்தாக உமா தரப்பிலும்¸ செல்வமணி தரப்பிலும் வேட்டவலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்ப்பட்டிருந்தது. அதன் பிறகு அவர்களிடையே சமாதானம் ஏற்பட்டதால் மேல்நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. 

திமுக ஆளும் கட்சியாக இருந்தாலும் வேட்டவலம் அரசியலில் திமுகவிற்கு குடைச்சல் தரும் நபராக செல்வமணி விளங்கி வந்தார். 

இந்நிலையில் கடந்த 23ந் தேதி வேட்டவலம் பேரூராட்சி அலுவலகத்தில் ரூ.90 லட்சத்தில் பிடாரன் கொட்டாய் வரை சாலை போடுவது குறித்த டெண்டர் சம்மந்தமாக அங்கிருந்த அலுவலர்களிடம் திமுக நகர செயலாளர் முருகையன்¸ அதிமுக நகர செயலாளர் செல்வமணி ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் அலுவலகத்தின் ஜன்னல் ஓரம் செல்போனை கையில் வைத்துக் கொண்டு திமுக வட்டக் கழக செயலாளர் மணிவண்ணன் நின்று கொண்டிருந்தாராம். இதைப் பார்த்த செல்வமணி ஏன் போட்டோ எடுக்கிறார் என அவரிடம் தகராறு செய்தாராம். இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றி கீழே கிடந்த கட்டையால் மணிவண்ணனை¸ செல்மணி தாக்கியதாக சொல்லப்படுகிறது. பிறகு செல்மணியுடன் வந்தவர்களும் மணிவண்ணனை சரமாறியாக தாக்கியதாக கூறப்படுகிறது. 5வது வார்டு கவுன்சிலர் மகன் பாலாஜி என்பவர்¸ மணிவண்ணனை மீட்டு அழைத்துச் சென்றார். 

இதே போல் தங்களை திமுகவினர் தாக்கி மோதிரத்தை பிடுங்கி சென்று விட்டதாக செல்வமணி தரப்பில் குற்றச்சாட்டு சொல்லப்பட்டது.

இந்நிலையில் மணிவண்ணன்¸ கொடுத்த புகாரின் பேரில் கொலை முயற்சி உள்பட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்மணியை இன்று மாலை கைது செய்தனர். 

செல்வமணி கைது செய்யப்பட்டது வேட்டவலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  செல்வமணி கைது செய்யப்பட்டதற்கு அதிமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

See also  திருவண்ணாமலை 25வது வார்டில் மறு வாக்குப்பதிவா?

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!