Homeசெய்திகள்3 குழந்தைகளை ஆற்றில் வீசி தாய் தற்கொலை முயற்சி

3 குழந்தைகளை ஆற்றில் வீசி தாய் தற்கொலை முயற்சி

திருவண்ணாமலை சிலிண்டர் வெடித்து 3பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் புதுகாமூர் பகுதியில் வசிப்பவர் முத்தாபாய்.பூ வியாபாரம் செய்து வருகிறார்.இவரது வீட்டில் முடி திருத்தும் தொழில் செய்துவரும் ஜானகிராமன் குடியிருந்து வருகிறார். ஜானகிராமன் மனைவி கமலாட்சி.மகன்கள் சுரேஷ், ஹேமானந்த். 
சிலிண்டரில் கசிவு 
முத்தா பாய் வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டரில்  கடந்த 4 நாட்களாக கசிவு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.இதுபற்றி சம்பந்தப்பட்ட கேஸ் நிறுவனத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதாம். ஆனால் கசிவை நிறுத்த சம்மந்தப்பட்ட கம்பெனி உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு முத்தா பாய் அவரது பத்தாம் வகுப்பு படிக்கும் அவரது மகள் மீனா, ஜானகிராமன், காமாட்சி, சுரேஷ், ஹேமானந்த் ஆகியோர் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். இன்று காலை மின் விளக்கை இயக்கியபோது கசிவு ஏற்பட்ட சிலிண்டரில் தீப்பிடித்து வெடித்து சிதறியது. 
                                                                                                                                                                      திருவண்ணாமலை சிலிண்டர் வெடித்து 3பேர் பலி


வீடு தரைமட்டம்
  
இதில் வீடு தரைமட்டம் ஆனது. இந்த விபத்தில்.பக்கத்து வீட்டில் வசிக்கும் சந்திரம்மாள் என்பவர் மீது சுவர் இடிந்து விழுந்ததில் அவர் அதே இடத்தில் நசுங்கி பலியானார். இடிபாடுகளில் சிக்கிய முத்தா பாய், மீனா, ஜானகிராமன், காமாட்சி,சுரேஷ், ஹேமானந்த் ஆகியோரை தீயணைப்பு துறையினர் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசாங்க மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு காமாட்சியும், ஹேமானந்தும் பரிதாபமாக இறந்தனர். 
                                                                                                      
அமைச்சர் பார்வையிட்டார் 

சம்பவ இடத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்,மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, தூசி மோகன் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டனர். கேஸ் கம்பனியின் அலட்சியம் மூன்று பேரின் உயிரை பறித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை சிலிண்டர் வெடித்து 3பேர் பலி

இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一一சிலிண்டரை உபயோகிக்கும் போது கவனமாகவும்¸ எச்சரிக்கையாகவும் இருங்கள்- முதல்வர் வேண்டுகோள் 

ஆரணியில் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலியான சம்பவத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை
ஆழ்ந்த இரங்கல் 
ஆரணி வட்டம் மற்றும் நகரத்தில் வசிக்கும் திருமதி முத்தம்மாள் என்பவரின் வீட்டில் இன்று (15.11.2020) காலை எரிவாயு கசிவு ஏற்பட்டு¸ சிலிண்டர் வெடித்ததில்¸ காமாட்சி¸ ஹேமநாதன் மற்றும் சந்திரா அம்மாள் ஆகிய மூன்று நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் நான்கு நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்கண்ட துயர சம்பவத்தில் உயிரிழந்த காமாட்சி¸ ஹேமநாதன் மற்றும் திருமதி சந்திரா அம்மாள் ஆகிய மூன்று நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்¸ அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைச்சருக்கு உத்தரவு
இந்த செய்தி குறித்து அறிந்தவுடன்¸ சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும்¸ உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும்¸ காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்து கொள்ளவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்¸ திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். எனது உத்தரவின் பேரில்¸ அமைச்சர் தலைமையில்¸ மாவட்ட ஆட்சியர்¸ தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினர்¸ காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். 
சிலிண்டர் வெடித்த இடத்தில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு
நிதி உதவி 

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த காமாட்சி¸ ஹேமநாதன் மற்றும் சந்திரா அம்மாள் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும்¸ பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும்¸ சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 50¸000, ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
பொதுமக்கள் தங்களது வீடுகளில் எரிவாயு சிலிண்டரை உபயோகிக்கும் போது¸ கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என இத்தருணத்தில் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
நியூஸ் அப்டேட்
18-11-2020ந் தேதிய தகவல்
இந்நிலையில் வேலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த முத்தாபாயும்¸ மீனாவும் இறந்தனர்.இதனால் சாவு எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!