Homeஅரசு அறிவிப்புகள்பள்ளிகளில் மாணவிகளுக்காக புகார் பெட்டி வைக்கப்படும்

பள்ளிகளில் மாணவிகளுக்காக புகார் பெட்டி வைக்கப்படும்

பள்ளிகளில் மாணவிகளுக்காக புகார் பெட்டி வைக்கப்படும்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளில் மாணவிகள் தங்கள் பிரச்சனைகள் குறித்து தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்பட உள்ளதாக எஸ்.பி.பவன்குமார் தெரிவித்தார். 

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை குழந்தைகளுக்கெதிரான குற்றத்தை தடுக்கும் நோக்கத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாவட்ட காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடியாக சென்று மாணவ மாணவிகளை இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று 26.03.2022-ந் தேதி காலை 8.30 மணிக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு பேரணியை டேனிஷ் மிஷன் பள்ளியிலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன்குமார் கொடியசைத்து துவங்கி வைத்தார். பேரணியானது பெரியார் சிலை¸ ரவுண்டனா¸ அறிவொளி பூங்கா¸ அண்ணா வளைவு வழியாக வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் முடிவடைந்தது. இதில் சுமார் 3000 மாணவிகள் கலந்துகொண்டனர்.

பள்ளிகளில் மாணவிகளுக்காக புகார் பெட்டி வைக்கப்படும்

இதைத் தொடர்ந்து ஆண்டாள் சிங்காரவேலு மண்டபத்தில் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தை தடுக்கும் நோக்கத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன்குமார்¸ திருவண்ணாமலை போக்சோ நீதிமன்ற நீதிபதி வசந்தி¸ திருவண்ணாமலை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜகாளீஸ்வரன்¸ திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி¸ திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் மீனாம்பிகை¸ திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் செல்வி¸ திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மு.அண்ணாதுரை¸  வந்தவாசி உட்கோட்ட துணை காவல் காண்காணிப்பாளர் விசுவேஸ்வரய்யா ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கெதிரான குற்றத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வை மாணவியரிடையே ஏற்படுத்தினர். 

நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் மாணவிகள் நல வாழ்வு¸ நல்வழிகாட்டுதல்¸ தன்னம்பிக்கை அளித்தல்¸ நன்னெறிப்படுத்துதல்¸ ஊக்குவித்தல்¸ ஆலோசனை வழங்குல் உள்ளிட்டவைகளுக்கு தொடர்பு கொள்ளும் விதமாக 9549174174 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டது. 

பள்ளிகளில் மாணவிகளுக்காக புகார் பெட்டி வைக்கப்படும்

மேலும் குழந்தைகள் பாலியல் ரீதியான வன்கொடுமைகளில் இருந்து அவர்களை காக்கவும்¸ குழந்தை திருமணம் நடைபெறுவதை தடுக்கவும்¸ குழந்தைகள் இதுபோன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்கும்¸ குழந்தைகளின் சந்தேகங்களுக்கு தேவையான ஆலோசனை வழங்குவதற்கும்¸ குழந்தைகளுக்கெதிரான எந்தவித குற்றங்கள் நடந்தாலும் மேற்கண்ட  எண்ணை தொடர்பு கொண்டால் காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவுன் குமார் ரெட்டி மாணவிகள் மத்தியில் பேசுகையில் வருகின்ற கோடை விடுமுறைக்கு பின்னர் அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் புகார் அளிக்கும் ஏதுவாக புகார் பெட்டி அமைக்கப்படும். புகார் பெட்டியில் மாணவிகள் தெரிவிக்கும் புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை சார்பில் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். மாணவிகள் தன்னம்பிக்கையுடன் இருந்து புகார்களை தெரிவிக்க முன்வரவேண்டும் என்றார்.

See also  கூட்டுறவு துறையில் வேலையில் சேர விருப்பமா?

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!