Homeசெய்திகள்திருவண்ணாமலையில் பிரபல பள்ளிகளுக்கு சீல் வைப்பு

திருவண்ணாமலையில் பிரபல பள்ளிகளுக்கு சீல் வைப்பு

திருவண்ணாமலையில் பிரபல பள்ளிகளுக்கு சீல் வைப்பு

திருவண்ணாமலையில் வரி செலுத்தாத பள்ளிகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். 

திருவண்ணாமலை நகரம் 13.64 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆண்கள்- 72 ஆயிரத்து 406 பேர்¸ பெண்கள்- 72 ஆயிரத்து 872 பேர் என இந்நகரத்தின் மக்கள் தொகை மொத்தம் 1 லட்சத்து 45 ஆயிரத்து 278 ஆக உள்ளது.  

திருவண்ணாமலையில் பிரபல பள்ளிகளுக்கு சீல் வைப்பு
நகராட்சி அலுவலகம் 

ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் அதிகமான வர்த்தக நிறுவனங்கள்¸ திருமண மண்டபங்கள்¸ தங்கும் விடுதிகள்¸ திரையரங்குகள்¸ ஓட்டல்கள் உள்ளன. இவைகளிடமிருந்து பெறப்படும் வரி மூலமாகவும்¸ நகராட்சி சார்பில் மத்திய பேருந்து நிலையம்¸ வாகனங்கள் நிறுத்துமிடம்¸ கடைகளிலிருந்து கிடைக்கும் வருமானம் மூலமாகவும்¸ குடிநீர் வரி மூலமாகவும் நகராட்சி வருவாயை ஈட்டி வருகிறது. இதன் மூலம் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரப்படுகிறது. 

வரி வசூலாகாத நிலையில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு¸ நிறுவனங்களுக்கு சீல் வைப்பு போன்ற நடவடிக்கைகளில் மூலமாக நகராட்சி வரி வசூலை செய்து வருகிறது. ஆனாலும் திருவண்ணாமலை நகராட்சிக்கு வர வேண்டிய வரி பாக்கி பல கோடி ரூபாய்க்கு இருக்கிறது. 

See also  ரயில் டிக்கெட் பதிவு-விதவிதமான சாப்ட்வேரை தயாரித்து மோசடி
திருவண்ணாமலையில் பிரபல பள்ளிகளுக்கு சீல் வைப்பு
பார்த்தசாரதி

இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் எஸ்.பார்த்தசாரதி தலைமையில் நகராட்சி அலுவலர்கள் இன்று திருவண்ணாமலை-வேட்டவலம் ரோட்டில் உள்ள 2 பள்ளிகளுக்கு வரி பாக்கிக்காக சீல் வைத்தனர். நாளை திங்கட்கிழமை பள்ளி திறக்க உள்ள நிலையில் சீல் வைக்கப்பட்டதால் பள்ளி நிர்வாகிகள் செய்வதறியாது திகைத்தனர். கொரோனா காரணமாக 2 வருடமாக பள்ளி சரிவர இயங்கவில்லை. இதனால் வரி கட்ட எங்களுக்கு கால அவகாசம் வழங்கிட வேண்டும் என பள்ளி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த அதிகாரிகள் சீல் வைத்து விட்டு சென்றனர். பாக்கித் தொகை வசூலான பிறகு இந்த சீலை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். 

பள்ளிகளுக்கு  சீல் வைக்கப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது பற்றி நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதியிடம் கேட்டதற்கு திருவண்ணாமலை நகராட்சிக்கு ரூ.40 கோடிக்கு வரி பாக்கி வர வேண்டியதுள்ளது. இதன் காரணமாக இன்று 3 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. பாக்கி தொகை கட்டிய பிறகு சீல் அகற்றப்பட்டது. இன்று மட்டும் ரூ.15லட்சம் வசூலாகி உள்ளது. பாக்கி செலுத்தாத நிறுவனங்கள் மீதான நடவடிக்கை தொடரும் என்றார். 

See also  திருவண்ணாமலை:ரூ.2 கோடி இடம் அதிரடியாக மீட்பு

திருவண்ணாமலை நகராட்சியில் மாநகராட்சியை விட வரி அதிகமாக இருக்கிறது. கடந்த ஆட்சியில் முறையின்றி தாறுமாறாக வரி உயர்த்தப்பட்டது. அதனால் பொதுமக்களுக்கும் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். நகரமன்ற முதல் கூட்டத்தில் வரியை குறைக்கவும், வாடகையை சீரமைக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்து முதல் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என நகரமன்ற தலைவர் பணி துவக்க விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசிய நிலையில்தான் நகராட்சி அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!