Homeஆன்மீகம்630 கிலோ மீட்டர் பயணிக்கும் சிவபெருமான்¸ நாயன்மார்கள் ரதம்

630 கிலோ மீட்டர் பயணிக்கும் சிவபெருமான்¸ நாயன்மார்கள் ரதம்

630 கிலோ மீட்டர் பயணிக்கும் சிவபெருமான்¸ நாயன்மார்கள் ரதம்

3 டன் எடை கொண்ட சிவன் ரதம்¸ 2170 கிலோ எடை கொண்ட நாயன்மார்கள் ரதம் ஆகியவற்றை சிவபக்தர்கள் 630 கிலோ மீட்டர் தூரம் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.  

உலகில் தோன்றிய முதல் யோகியான சிவனின் 112 அடி உயர சிலை கோவை வெள்ளியங்கிரி மலையில் நிறுவப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழக மக்கள் ஆதியோகியை வணங்கும் விதம் ஆண்டுதோறும் ரதயாத்திரை தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

630 கிலோ மீட்டர் பயணிக்கும் சிவபெருமான்¸ நாயன்மார்கள் ரதம்

630 கிலோ மீட்டர் பயணிக்கும் சிவபெருமான்¸ நாயன்மார்கள் ரதம்

9 ஆவது ஆண்டாக கடந்த 2ந் தேதி 63 நாயன்மார்கள் ரதமும்¸ சிவபெருமான் ரதமும் சென்னையிலிருந்து புறப்பட்டது. இந்த ரதங்கள் செங்கல்பட்டு, உத்திரமேரூர்,வந்தவாசி,சேத்துப்பட்டு,போளூர் வழியாக செங்கத்தை சென்றடைந்தது. போளுர் மற்றும் செங்கத்தில் வாணவேடிக்கை முழுங்க ரதங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. போளுரில் ஒவ்வொரு வீதியாக ரதங்கள் வலம் வந்தது. இந்த ரதங்கள் 25 நாட்கள் 630 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வருகிற 27ந் தேதி வெள்ளையங்கிரி மலையைச் சென்று அடைகிறது.

3 டன் எடை கொண்ட சிவபெருமான் ரதத்தில் அம்மையப்பர், ஆதியோகி சிவபெருமான், சப்தரிஷி, 18 சித்தர்கள், விநாயகர், நந்தியம்பெருமான், 32 சர்ப்பங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 2170 கிலோ எடை கொண்ட மற்றொரு ரதத்தில் 63 நாயன்மார்கள் சிலைகள் இடம் பெற்றுள்ளது. 

630 கிலோ மீட்டர் பயணிக்கும் சிவபெருமான்¸ நாயன்மார்கள் ரதம்

630 கிலோ மீட்டர் பயணிக்கும் சிவபெருமான்¸ நாயன்மார்கள் ரதம்
630 கிலோ மீட்டர் பயணிக்கும் சிவபெருமான்¸ நாயன்மார்கள் ரதம்

இவ்வளவு எடை கொண்ட ரதங்களை வாகனங்கள் உதவியின்றி தென்கைலாய பக்தி பேரவையினர் நடை பயணமாக வடம்பிடித்து இழுத்துச் சென்றது  பரவசத்தை ஏற்படுத்தியது. வழிநெடுகிலும் பொதுமக்கள் சிவபெருமானுக்கு பாலபிஷேகம் செய்து வணங்கினர். வடம் பிடித்தும் தேரை இழுத்துச் சென்றனர். 

See also  திருவண்ணாமலை:ரூ.5 கோடியில் பைரவருக்கு கோயில்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!