Homeஅரசு அறிவிப்புகள்1330 திருக்குறளை ஒப்புவித்தால் ரூ.10 ஆயிரம் பரிசு

1330 திருக்குறளை ஒப்புவித்தால் ரூ.10 ஆயிரம் பரிசு

1330 திருக்குறளை ஒப்புவித்தால் ரூ.10 ஆயிரம் பரிசு

1330 திருக்குறளை ஒப்புவிக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார். 

இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் 1330 திருக்குறள்களையும் ஒப்புவிக்க மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் முற்றோதல் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தலா ரூ.10¸000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் திறனறி குழுவினரால் திறனாய்வு செய்யப்பட்டு தகுதியானவர்கள் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுவர். இதற்கான திறனாய்வு திருவண்ணாமலை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையினரால் நடத்தப்படும். போட்டியில் பங்கேற்பவர்கள் 1330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும் இயல் எண்¸ அதிகாரம் எண்¸ பெயர் குறள் எண் போன்றவற்றைத் தெரிவித்து அதற்கான திருக்குறளைச் சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.

1330 திருக்குறளை ஒப்புவித்தால் ரூ.10 ஆயிரம் பரிசு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி¸ கல்லூரி மாணவ¸ மாணவியர் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்தப் பரிசை பெற்றவர்கள் மீண்டும் பங்கேற்கக் கூடாது. போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ மாணவியர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம் அல்லது [email protected] என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை 10.02.2022க்குள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

See also  வணிகர் நல வாரிய சேர்க்கை கட்டணத்தில் விலக்கு

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!