Homeசெய்திகள்திருவண்ணாமலை:73 பள்ளி கட்டிடங்கள் இடித்து தரைமட்டம்

திருவண்ணாமலை:73 பள்ளி கட்டிடங்கள் இடித்து தரைமட்டம்

திருவண்ணாமலை:73 பள்ளி கட்டிடங்கள் இடித்து தரைமட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பழுதடைந்த 73 பள்ளி கட்டிடங்கள் இன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. மேலும் 70 பள்ளிகள் இடிக்கப்பட உள்ளன. 

நெல்லையில் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். 4 மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பழுதான கட்டிடங்களை இடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஒவ்வொரு மாவட்டங்களிலும் பள்ளி கட்டிடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் இன்று தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் காம்பட்டு¸ வாணாபுரம் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்தார். அவருடன் கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப்¸ செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன்¸ உதவி செயற்பொறியாளர் சங்கர்¸ தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன்¸ ஆணையாளர் நிர்மலா¸ வட்டார வளர்ச்சி அலுவலர் கே.பி.மகாதேவன் ஆகியோர் சென்றிருந்தனர். 

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பழுதான பள்ளி கட்டிடங்கள் கண்டறிப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் கூறியுள்ளதாவது¸ 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு பள்ளிகள்¸ அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள்¸ தனியார் பள்ளிகளில் உள்ள கட்டிடங்கள்¸ சுற்றுச்சுவர்கள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் ஆய்வு செய்து பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை கண்டறிய வருவாய் துறை¸ ஊரக வளர்ச்சி துறை¸ பொதுப்பணித் துறை மற்றும் பள்ளி கல்வித்துறை அலுவலர்களை கொண்டு வட்டாரம் வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை:73 பள்ளி கட்டிடங்கள் இடித்து தரைமட்டம்

திருவண்ணாமலை:73 பள்ளி கட்டிடங்கள் இடித்து தரைமட்டம்

திருவண்ணாமலை:73 பள்ளி கட்டிடங்கள் இடித்து தரைமட்டம்

திருவண்ணாமலை:73 பள்ளி கட்டிடங்கள் இடித்து தரைமட்டம்

இக்குழுக்கள் கடந்த 2 வாரங்களாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு¸ தனியார் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இப்பணிகளை விரைவு படுத்துவதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 17.12.2021 அன்று ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. 

மாவட்டத்தில் இது வரை 143 பள்ளி கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து இடிக்கும் நிலையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 18.12.2021 தேதி வரை 73 பள்ளி கட்டிடங்கள் முழுமையாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இப்பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு ஒரு வார காலத்திற்குள் நிறைவடையும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். 

See also  நந்தி சிலையை எ.வ.வேலு திறந்து வைத்தார்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!