Homeஆன்மீகம்அண்ணாமலையார் பாதத்திற்கு பிராயசித்த அபிஷேகம்

அண்ணாமலையார் பாதத்திற்கு பிராயசித்த அபிஷேகம்

அண்ணாமலையார் பாதத்திற்கு பிராயசித்த அபிஷேகம்

திருவண்ணாமலை மலை மீது உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு இன்று பிராயசித்த அபிஷேகம் நடைபெற்றது. 

சிவபெருமானே விரும்பி அமர்ந்த இடம் திருவண்ணாமலை. இங்கு மலையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையில் உள்ள குகை நமச்சிவாயர் குகை¸ விருப்பாட்சி தேவர் குகை¸ வண்ணாத்தி குகை¸ மாமரத்து குகை¸ சடைச்சாமியார் குகை¸ பவளக்குன்று குகை ஆகியவை பிரசித்தி பெற்றவையாகும். ஆயிரமாயிரம் தபஸ்விகளும்¸ சித்தர்களும்¸ அரூபமாக இம்மலையில் உறைந்துள்ளனர். ஆகையால் தான் இதன் சக்தி¸ ஆற்றல் அளப்பரியதாக உள்ளது. 

சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சியளித்த 2668 அடி உயர இந்த மலை உச்சியில் கடந்த மாதம் 19ந் தேதி மகாதீபம் ஏற்றப்பட்டது. 11நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளித்த மகா தீபம் 29ந் தேதியோடு நிறைவு பெற்றது. பிறகு தீப கொப்பரை மலைமீதிருந்து இறக்கி அண்ணாமலையார் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்ட கொப்பரைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அடுத்த மகா தீபம் வரை இந்த கொப்பரை ஆயிரங்கால் மண்டபத்திலேயே வைக்கப்பட்டிருக்கும். 

தீப திருவிழா முடிந்து மலை உச்சியில் இருக்கும் அண்ணாமலையார் பாதத்திற்கு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். கைலாய மலை சிவபெருமானுடைய இருப்பிடமாக கருதப்படுகிறது. இம்மலையை தினமும் ஏறுவதற்கு தடையில்லை. ஆனால் மலையே சிவனாக விளங்கும் திருவண்ணாமலை மலை மீது நமது பாதங்கள் படுவது பாவம் எனப்படுகிறது. 

ஆனாலும் மகாதீபம் ஏற்றப்படும் அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி தீபத்தை தரிசிப்பார்கள். மலைமீது ஏறி தரிசனம் செய்துவிட்டு¸ மலை இறங்கி வீட்டிற்குச் சென்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது¸ வீட்டருகே குடும்பத்தோட நின்று தேங்காய்¸ பழம்¸ வெற்றிலை பாக்கு வைத்து மாவிளக்கு ஏற்றி¸ அண்ணாமலை தீபத்தை பார்த்து “அண்ணாமலைக்கு அரோகரா” என்று கோஷமிட்டு வணங்குவதை வழக்கமாக கொண்டிருப்பர். ஆனால் கடந்த 2 வருடமாக மலையேற தடை விதிக்கப்பட்டது. கோர்ட்டு உத்தரவின்படி கடந்த வருடம் 2 ஆயிரம் பேருக்கு மட்டும் மலையேற அனுமதி அளிக்கப்பட்டது. இந்த வருடம் இது முற்றிலும் தடை செய்யப்பட்டது. ஆனாலும் தடையை மீறி மலையேறிய ஒருவர் நெஞ்சுவலி ஏற்பட்டு மலை மீதே இறந்து போனார். 

அண்ணாமலையார் பாதத்திற்கு பிராயசித்த அபிஷேகம்

அண்ணாமலையார் பாதத்திற்கு பிராயசித்த அபிஷேகம்

அண்ணாமலையார் பாதத்திற்கு பிராயசித்த அபிஷேகம்

அண்ணாமலையார் பாதத்திற்கு பிராயசித்த அபிஷேகம்

எனவே தோஷம்¸ தீட்டு விலக பிராயசித்த அபிஷேகம் இன்று (9-12-2021) நடைபெற்றது. அண்ணாமலையார் கோயில் ஒன்றாம் பிரகாரத்தில் இதற்காக புனித நீர் கொண்ட கலசத்தை வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பிறகு புனித நீர் கொண்ட கலசம் கோயில் பிச்சகர் விஜயகுமாரிடம் வழங்கப்பட்டது. அவரது தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் மலை உச்சிக்கு சென்று அண்ணாமலையார் பாதத்திற்கு பூஜைகளை செய்தனர். பால்¸ தயிர்¸ சந்தனம் போன்ற திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. 

பிறகு பாதத்திற்கு பூ¸ பழம்¸ தேங்காய் வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அந்த தீபாராதனையை திருவண்ணாமலை நகரத்தை நோக்கியும் பிச்சகர் விஜயகுமாரிடம் காட்டினார். அந்த சமயத்தில் வானில் விஷ்ணுவின் அம்சமான கருடன் வட்டமிட்டு சுற்றியதால் பிராயசித்த பூஜை செய்ய சென்ற குழுவினர் பரவசம் அடைந்து வணங்கினர். 

அண்ணாமலையார் பாதத்திற்கு பிராயசித்த அபிஷேகம்
அண்ணாமலையார் பாதத்திற்கு பிராயசித்த அபிஷேகம்
அண்ணாமலையார் பாதத்திற்கு பிராயசித்த அபிஷேகம்

இதைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற சந்திரசேகரர் உற்சவத்துடன் இந்த வருட தீபத்திருவிழா நிறைவு பெற்றது. 

-செந்தில் அருணாச்சலம். 

See also  தீப விழா சிறப்பாக நடைபெற துர்க்கையம்மன் உற்சவம்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!