திருவண்ணாமலை:பார்வையற்ற 150 பேர் கிரிவலம் சென்றனர்

Date:

சென்னை அரிமா சங்கம் முயற்சியின் காரணமாக திருவண்ணாமலையில் முதன்முறையாக கண்பார்வையற்ற 150 பேர்கள் கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலை:பார்வையற்ற 150 பேர் கிரிவலம் சென்றனர்

மாற்று திறனாளிகளில் பார்வையற்று பிறந்து விட்டால் தன்னுடைய உருவம் எப்படிபட்டது என தெரியாமலும், இந்த உலகை பார்க்க முடியாமலும் போய் விடும் கொடுமையை அனுபவிக்க வேண்டியது உள்ளது. தன்னம்பிக்கை ஒன்றையே மூலதனமாக கொண்டு வாழ்ந்து வரும் இவர்களுக்கு அரசும், தொண்டு நிறுவனங்களும் உதவிகளை செய்து வருகின்றன. இதில் சென்னை அரிமா சங்கம், பல ஆண்டுகளாக கண் பார்வையற்றவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

உதவிகளை செய்தாலும், அவர்களுக்கென்று உள்ள ஆசையையும் நிறைவேற்றிட சென்னை அரிமா சங்கம் முன் வந்தது. பெரும்பாலானவர்களின் ஆசை, திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும், கிரிவலம் செல்ல வேண்டும் என்பதாக இருந்தது. இதையடுத்து விருப்பம் உள்ளவர்களை சென்னையில் ஒருங்கிணைக்க செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிருந்து பெண்கள் உள்பட 150 கண் பார்வையற்றவர்கள் திருவண்ணாமலைக்கு செல்வதற்காக வந்திருந்தனர். அவர்களை 3 பஸ்கள் மூலமாக திருவண்ணாமலைக்கு சென்னை அரிமா சங்க நிர்வாகிகள் அழைத்து வந்தனர்.

See also  அண்ணாமலையார் கோயிலில் சமய நூலகம்

அவர்கள் அனைவருக்கும் திருவண்ணாமலை தேரடித் தெருவில் உள்ள சாதுக்கள் அன்னசத்திரத்தில் தங்க வைக்கப்பட்டு உணவு அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு 150 பேரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். பிறகு கிரிவலம் சென்றனர்.

அவர்கள் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் 30க்கும் மேற்பட்ட சென்னை அரிமா சங்க நிர்வாகிகளும், தன்னார்வலர்களும், திருவண்ணாமலை சண்முகா கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர்களும் உதவிகளை செய்தனர்.

திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி, இத்தலத்திற்கு வர வேண்டும் என்ற எங்களது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய அரிமா சங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

புண்ணிய தலத்தில் காலடி வைத்துள்ளது மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. தன்னம்பிக்கையும், இறைவன் மீது நம்பிக்கையையும் கொண்டு வாழ்ந்து வருகிறோம், எங்களால் இறைவனை பார்க்க முடியாவிட்டாலும், இறைவனின் பார்வை எங்கள் மீது விழுந்தால் போதும்

புண்ணிய தலத்தில் காலடி வைத்துள்ளது மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. தன்னம்பிக்கையும், இறைவன் மீது நம்பிக்கையையும் கொண்டு வாழ்ந்து வருகிறோம், எங்களால் இறைவனை பார்க்க முடியாவிட்டாலும், இறைவனின் பார்வை எங்கள் மீது விழுந்தால் போதும் என நெகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.

See also  திருவண்ணாமலை கோயிலில் காலபைரவர் அபிஷேகம்

இறைவனின் தரிசனம், பார்வையற்றவர்களின் மனதில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும், அவர்களின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும் என்பதற்காகவே அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலத்திற்கும் அழைத்துச் சென்றதாக சென்னை அரிமா சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

திருவண்ணாமலை:-427 சமையல் உதவியாளர் நியமனத்திற்கான அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள சமையல் உதவியாளர்...

திமுக எம்.எல்.ஏக்கள் லஞ்சம் வாங்க மாட்டார்கள்-எ.வ.வேலு கூறுகிறார்

திமுக எம்.எல்.ஏக்கள் கையூட்டு பெறாமல், எதையும் எதிர்பார்க்காமல் சிறப்பாக பணியாற்றி வருவதாக...

அங்கன்வாடியில் 439 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையத்தில் அங்கன்வாடி பணியாளர்,குறு அங்கன்வாடி பணியாளர்...

அண்ணாமலையார் கோயில் பெண் பணியாளர் பேசிய பரபரப்பு ஆடியோ

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பெண் பணியாளர் ஒருவர் பேசிய ஆடியோ சமூக...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4299 கொடி கம்பங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசியல் கட்சிகள், அமைப்பு சார்ந்த கொடி கம்பங்கள் 4299...

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பாமகவினர்

போலீஸ் நிலையத்தை பாமகவினர் முற்றுகையிட்டதால் பிடித்துச் சென்ற தொண்டரை போலீசார் விடுவித்தனர். திருவண்ணாமலை...
error: Content is protected !!