Homeசெய்திகள்கோயில் அருகே இருந்த இறைச்சி கடை இடித்து தரைமட்டம்

கோயில் அருகே இருந்த இறைச்சி கடை இடித்து தரைமட்டம்

கோயில் அருகே இருந்த இறைச்சி கடை இடித்து தரைமட்டம்

ஆரணியில் கோயில் அருகே இருந்த இறைச்சி கடையை அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆரணி நகரில் உள்ள காந்தி ரோட்டில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் குறிப்பாக பெண்கள் வந்து அம்மனை வணங்கி செல்வர். மேலும் செவ்வாய்¸ வெள்ளிக்கிழமைகளிலும்¸ ஆடி மாதத்திலும் கூட்டம் அதிகரித்து காணப்படும். இந்நிலையில் இந்த கோயிலுக்கு அருகில் இடத்தை ஆக்கிரமித்து பழனி என்பவர் அருள்மிகு.மாரியம்மன் ஏ1 என்ற பெயரில் டிபன் கடையும்¸ கருவாடு கடையையும் நடத்தி வந்தார். மேலும் பிரியாணி¸ சிக்கன் பகோடாவையும் விற்பனை செய்து வந்தார். 

இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இந்த கடையை அகற்றக் கோரி அவர்கள் நகராட்சி நிர்வாகத்தினரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் நகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து களமிறங்கிய இந்து முன்னணி நிர்வாகிகள்¸ கோயில் அருகே இறைச்சி கடை நடப்பது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று புகார் மனுவும் அளித்தனர். 

இதையடுத்து ஆரணி உதவி கலெக்டர் கவிதா¸ கோயில் அருகே ஆக்கிரமிப்பில் உள்ள அந்த இறைச்சி கடையை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். ஆனால் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆரணி நகராட்சி அலுவலகத்தில் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய நகராட்சி அதிகாரிகள் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. 

கோயில் அருகே இருந்த இறைச்சி கடை இடித்து தரைமட்டம்

கோயில் அருகே இருந்த இறைச்சி கடை இடித்து தரைமட்டம்

கோயில் அருகே இருந்த இறைச்சி கடை இடித்து தரைமட்டம்

இது சம்மந்தமாக கடையை அகற்றிட  நகராட்சி சார்பில் பழனிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் கடையை அகற்ற முன்வரவில்லை. இதனால் இன்று நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று கடையை ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர். 

தரிசனத்திற்கு இடையூறாக இருந்த இறைச்சி கடை அகற்றப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கு காரணமான இந்து முன்னணி அமைப்பினருக்கு அவர்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். 

இதே போல் திருவண்ணாமலை மாடவீதியில் கோயிலை ஒட்டி உள்ள அசைவ ஓட்டலை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்து அமைப்பினர் முன்வர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

See also  தேர்தல்: பழைய குற்றவாளிகள் 43 பேர் கைது

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!