Homeசெய்திகள்100 நிறுவனங்கள் பங்குபெறும் வேலைவாய்ப்பு முகாம்

100 நிறுவனங்கள் பங்குபெறும் வேலைவாய்ப்பு முகாம்

125 நிறுவனங்கள் பங்குபெறும் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் 11ந் தேதி நடைபெற உள்ள வேலை வாய்ப்பு முகாமில் 100 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன என அமைச்சர் எ.வ.வேலு கூறியிருக்கிறார்.

இதில் தேர்வாகும் இளைஞர்கள் ரூ.15ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் பெற வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம்¸ திருவண்ணாமலை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்¸ தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்¸ மகளிர் திட்டம் மற்றும் திருவண்ணாமலை¸ அருணை பொறியியல் கல்லூரியுடன் இணைந்து படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப வேலை வாய்ப்பை பெற்றுத்தரும் நோக்குடன் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 11.12.2021 (சனிக்கிழமை) காலை 8 மணி அளவில் அருணை பொறியியல் கல்லூரி¸ திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது.

125 நிறுவனங்கள் பங்குபெறும் வேலைவாய்ப்பு முகாம்


இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் Hatsun Agro Product Ltd, Apollo Pharmacies Ltd, TVS Training & Services,  Motherson Automotive Pvt Ltd, Simho Hr Services Pvt Ltd, HDFC Bank, IIFL Ltd உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு CNC Operator, Supervisor, Machine Operator, Business Development Executive, HR Manager, Sales Manager, Marketing Manager, Data Entry Operator, Apprentice, Pharmacist  உள்ளிட்ட 10ஆயிரத்திற்கும்  மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். 

தேர்வு செய்யும் வேலைநாடுநர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படும். மேலும்¸ அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டல்¸ திறன் பயிற்சி, தொழிற்பழகுநர் பயிற்சிகளுக்கான ஆள்சேர்ப்பு¸ மாவட்ட தொழில் மையம் வழங்கும் சுய வேலைவாய்ப்பு திட்டம்¸ மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டல் மற்றும் தாட்கோ மூலம் வழங்கப்படும் நலத் திட்டங்கள் போன்ற சேவைகள் வழங்க உரிய துறைகளின் மூலம் தனித்தனி அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம்.

எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை¸ ஐ.டி.ஐ¸ பாலிடெக்னிக் பொறியியல்¸ நர்சிங் கல்வித் தகுதியுடையவர்கள் மற்றும் முதுநிலை மேலாண்மை படித்தவர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாம் அன்று தங்களுடைய 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம். ரேஷன் அட்டை¸ சாதிச்சான்று¸ கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்துகொள்ள வேண்டும். முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04175 -233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு¸ விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

125 நிறுவனங்கள் பங்குபெறும் வேலைவாய்ப்பு முகாம்

அருணை பொறியியல் கல்லூரியில் முகாம் நடைபெறும் இடத்தை தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் பார்வையிட்டார். பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது¸ 

இதுவரை தமிழகம் முழுவதும் 12 இடங்களில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 16 ஆயிரம் இளைஞர்களுக்கு  வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. 

13வது வேலைவாய்ப்பு முகாம் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 2 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார். 

இந்த ஆய்வின் போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவ ராவ்¸ மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ்¸ கூடுதல் ஆட்சியர் பிரதாப்¸ மண்டல இணை இயக்குனர் வேலைவாய்ப்பு அனிதா¸ மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் ஏ எ.வ.வே.கம்பன்¸ தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன்¸ நகர செயலாளர் கார்த்திக்வேல்மாறன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது¸ 

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு¸ அவரின் ஆணைக்கிணங்க மாவட்ட தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வருடத்திற்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர்  தெரிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக 11.12.2021 சனிக்கிழமை காலை 8 மணிமுதல் மாலை 3 மணிவரை திருவண்ணாமலை தென்மாத்தூரில் உள்ள அருணை பொறியியல் கல்லூரியில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம்¸ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம்¸ தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்¸ மகளிர் திட்டம் மற்றும் அருணை பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை மற்றும் திறன் பயிற்சி ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.  

மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் ஆண்¸ பெண் இருபாலரும் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்கிறேன். 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 8ஆம் வகுப்பு¸ 10ஆம் வகுப்பு¸ 12ஆம் வகுப்பு¸ தொழிற்பயிற்சி கல்வி (ஐடிஐ)¸ பட்டய பயிற்சி¸ கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள்¸ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள்¸ பொறியியல் பட்டதாரிகள்¸ செவிலியர் பட்டம் பெற்று வேலை நாடுபவர்கள் ஆதார் அட்டை¸ சுயவிவர குறிப்பு மற்றும் புகைப்படத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.

மேலும் வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெற விருப்பம் உள்ளவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நடைபெறவுள்ள மாபெரும் முகாமில் 18 வயதிற்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் அனைவரும் பங்கேற்று பயனடைய கேட்டுக்கொள்கிறேன். இங்கு பணிநியமனம் பெறுபவர்கள் ரூ 15ஆயிரம் முதல்¸ ரூ 50ஆயிரம் வரை மாத ஊதியம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட முழுவதும் இருந்து வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை தருகிற இளைஞர்களுக்கு திருவண்ணாமலை ஈசான்ய லிங்கம் அருகில்¸ வேலூர் சாலை (தீபம் நகர்) அருகில் என இரண்டு இடங்களில் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் மதிய அறுசுவை உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள்¸ உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள்¸ தன்னார்வலர்கள்¸ வேலை வாய்ப்பு முகாம் குறித்தான கைப்பிரதிகளை மாணவர்கள்¸ இளைஞர்களுக்கு வழங்கியும்¸ விளம்பரப்படுத்தியும் வேலை வாய்ப்பு முகாம் வெற்றியடைய ஒத்துழைக்க கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

See also  திமுக- அதிமுக கவுன்சிலர்களிடையே மோதல்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!