காட்பாடி விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெறலாம்

Date:

காட்பாடி விளையாட்டு விடுதியில் திருவண்ணாமலை மாவட்ட கல்லூரி மாணவிகள் தங்கி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

காட்பாடி விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெறலாம்

காட்பாடி விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெறலாம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள் கல்லூரிகளில் பயிலும் மாணவியர்கள் விளையாட்டு துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, ஊட்டச்சத்து நிறைந்த உணவு, தங்குமிட வசதி மற்றும் பல்வேறு அளிவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு வழிவகை செய்யும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் மூலமாக செயல்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டம், காட்பாடியில் புதிய விளையாட்டு அரங்கம் மற்றும் மாணவியர்களுக்கான சிறப்பு நிலை விளையாட்;டு விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு விடுதியில் கூடைப்பந்து, வளைகோல்பந்து, கைப்பந்து மற்றும் கபாடி ஆகிய பிரிவுகளில் 2022-2023-ம் ஆண்டிற்கு தங்கி பயிற்சி பெற 21.09.2022 அன்று தேர்வு (selection) நடைபெற்றது. இந்த விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற காலியிடங்கள் உள்ளன. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் இந்த சிறப்பு விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சிபெற ஊக்கமளிக்கும் வகையில் இரண்டாம் கட்டமாக தேர்வு நடைபெறவுள்ளது.

See also  பொதுமக்கள் குறைகளை களைய போலீஸ் புதிய ஏற்பாடு

எனவே வேலூர் மாவட்டம் காட்பாடியில் சிறப்பு விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற விருப்பம் உள்ள மாணவியர்கள் http://www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 07.10.2022 வரை ஆன்லைன் (Online) மூலம் தகுதி சான்றிதழினை பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் சிறப்பு விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற மாணவியர்களுக்கான மாநில அளிவிலான தேர்வுகள் 10.10.2022 அன்று காலை 8.00 மணியளவில் வேலூர் மாவட்டம் காட்பாடி விளையாட்டரங்கில் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் திருவண்ணாமலை மாவட்டம் அவர்களை 04175-233169 என்ற தொலைபேசியில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.பா.முருகேஷ் இ.அ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

கலன் திரைப்படத்தில் சொல்லப்பட்டிருப்பது என்ன?

தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு எதிராக நடக்கும் என்கவுன்டர் குறித்த கதை அம்சத்துடன்...

திருவண்ணாமலையில் முதன்முதலாக 6 வழிச்சாலை

திருவண்ணாமலையில் முதன்முதலாக 6 வழிச்சாலை அமைப்பதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று...

திருப்பதி லட்டு-திருவண்ணாமலையில் சூரை தேங்காய் உடைப்பு

திருப்பதி லட்டில் மாமிச கொழுப்பை கலந்தவர்கள் மீது தக்க தண்டனை வழங்க...

கிரிவலப்பாதை அமைக்கும் முன்பே வீடுகள் அமைந்து விட்டது

திருவண்ணாமலை கிரிவலப்பாதை அமைக்கப்படுவதற்கு முன்னர் அப்பகுதிகளில் வீடுகள் அமைந்து விட்டதாக ஆக்கிரமிப்புகளை...

200 வருடம் பழமையான கோயிலை இடிக்க எதிர்ப்பு

சேத்துப்பட்டில் 200 வருட பழமையான விநாயகர் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து...

போளூர் பாலம் விவகாரம்-எ.வ.வேலு,அக்ரி கிருஷ்ணமூர்த்தி மோதல்

ஜனவரி மாதம் போளூர் பாலம் திறக்கவில்லை என்றால் எ.வ.வேலு தலை மீது...
error: Content is protected !!