அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி ஆசிரியர் ஒருவர் திருவண்ணாமலையில் காலுக்கு பதிலாக கையை கொண்டு பெடலை மிதித்து சைக்கிளை ஓட்டிச் சென்றார்.
திருவண்ணாமலை அடுத்த பழையமண்ணை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியராக இருப்பவர் எஸ்.குணசீலன். புதிய வாக்காளர் சேர்ப்பு ¸மத நல்லிணக்கம் மற்றும் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
காலுக்கு பதிலாக கையை கொண்டு பெடலை சுற்றி சைக்கிளை ஓட்டும் சாகச நிகழ்ச்சியை இன்று(23-11-2021) அவர் நடத்திக் காட்டினார். இதற்கான நிகழ்ச்சி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நேரு யுவகேந்திரா அலுவலகம் முன்பு நடைபெற்றது. யோகா பயிற்சியாளர் கல்பனா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் எஸ்.சுரேஷ்¸ துரிஞ்சாபுரம் வட்டார கல்வி அலுவலர் கோ.குணசேகரன்¸ நேரு யுவகேந்திரா கணக்காளர் கண்ணகி¸ தொல்லியல் நிபுணர் பாஷாபாய்¸ சுவாமி விவேகானந்தா யோகா – ஸ்கேட்டிங் கழக மாநிலஆலோசகர் கே.பி.ராஜகோபால்¸ யோகா பயிற்சியாளர் சுரேஷ்¸ தலைமையாசிரியர் ஆர்.சரவணன்¸ வக்கீல் ஆர்.ஷோபனா ராணி¸ ஸ்ரீஜெயம் சேரிடபிள் தொண்டு நிறுவனம் மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொறியாளர் இரா.கார்த்திக் வாழ்த்தி பேசினார். முடிவில் நேரு யுவகேந்திரா பி.தயானந்தன் நன்றி கூறினார்.
உடற்கல்வி ஆசிரியர் எஸ்.குணசீலன்¸ சைக்கிளின் பின்புறம் அமர்ந்து கொண்டு இடது கையால் கைப்பிடியை பிடித்துக் கொண்டு வலது கையினால் பெடலை சுற்றி நேரு யுவகேந்திரா அலுவலகம் முதல் கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை கோயில் வரை 4 கிமீ தூரம் சைக்கிளை ஓட்டிச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.