Homeசெய்திகள்சீமானை அழைத்து போராட்டம் நடத்திய வந்தவாசி விவசாயிகள்

சீமானை அழைத்து போராட்டம் நடத்திய வந்தவாசி விவசாயிகள்

சீமானை அழைத்து போராட்டம் நடத்திய வந்தவாசி விவசாயிகள்

வந்தவாசி பகுதியில் சிப்காட் அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்து சீமான் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

விவசாய இயக்கங்கள்

சிப்காட் அமைப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மேல்மா கிராமத்தைச் சுற்றியுள்ள தேத்துரை, குறும்பூர், வீரம்பாக்கம், நெடுங்கல், இளநீர் குன்றம், நர்மாபள்ளம், வடஆளப்பிறந்தான், அத்தி ஆகிய 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 3174 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா கூட்டு ரோட்டில் இன்று காலை விவசாய இயக்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

சீமானை அழைத்து போராட்டம் நடத்திய வந்தவாசி விவசாயிகள்

இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று தன் கட்சியின் ஆதரவை தெரிவித்தார். போராட்டத்தில் அவர் பேசியதாவது,

போராட்டமே வாழ்க்கை

இந்த போராட்டம் தொழிற்சாலை அமைவதற்கு எதிரானது அல்ல. வேளாண் நிலங்களை கையகப்படுத்தி தொழிற்சாலை அமைப்பதைத்தான் எதிர்க்கிறோம். உலக நாடுகளில் மக்கள் எப்பொழுதாவதுதான் போராடுவார்கள். ஆனால் தமிழ் இன மக்களுக்கு போராட்டமே வாழ்க்கையாக உள்ளது. விளை நிலங்கள் இருப்பதோ குறைவு. மேலும் அதை குறைத்துக் கொண்டே வருவது என்ன நியாயம். இங்கிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் சிப்காட் உள்ளது. அதனால் என்ன வளர்ச்சி கண்டு விட்டோம்?

See also  சூர்யா¸ ஜோதிகாவை கைது செய்ய போலீசில் பா.ம.க புகார்

வேளாண்மை என்பது தொழில் அல்ல அது நமது பண்பாடு. விமானத்தில் பறப்பது விஞ்ஞான வளர்ச்சி. அதில் பயணம் செய்பவர்களின் பசியை ஆற்றுவதற்கு என் விவசாயிதான் உழைக்க வேண்டும். 8 வழிச்சாலை பயண நேர குறைப்பு சாலையாக பெயர்தான் மாறியிருக்கிறது. எந்த தொழிற்சாலையிலும் விளை பொருட்களை தயாரிக்க முடியாது. வேளாண்மை கைவிட்ட எல்லா நாடுகளும் பிச்சை எடுக்கின்றன.

எட்டு வழிச்சாலை

இலங்கையை போல இந்த நாடும் மாறும் சூழ்நிலை வந்துகொண்டிருக்கிறது. 28 கோடி மக்களுக்கு இரவு உணவில்லை. விலங்குகள் அழிந்தால் மனிதகுலம் அழிந்து போகும்.அடர்ந்த காடுகள் அனைத்தும் பறவை நட்ட மரங்கள். மகரந்த சேர்க்கை எப்படி நடக்கிறது? அதனால்தான் பூக்கள் மலர்கின்றன. சாலை வேண்டுமா, வேண்டும். ஒற்றைத் தூண்களில் சாலைகள் நிற்கும் பிரேசிலை பார். நான் இருக்கும் வரை எட்டு வழிச்சாலைக்கு ஒரு செங்கல் கூட ஊன்ற முடியாது. நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று. எனக்கு வாக்களிக்க வேண்டும்.

சீமானை அழைத்து போராட்டம் நடத்திய வந்தவாசி விவசாயிகள்

திராவிட மாடல் என்பது என்ன? பொதுவாக மாடல் என்பது இருக்கும். ஆனால் எதுவும் செய்யாது. என் நிலத்தை விட்டு நான் செல்ல மாட்டேன். உங்களுடன் இருப்பேன்.

See also  லாபத்தை தருகிறோமே, கார்ப்பரேஷனை தரக் கூடாதா?

ஜி ஸ்கொயர்

படித்தவன் டாஸ்மாக்கில் சாராயம் விற்கலாம் விவசாயம் செய்யக்கூடாதா?. இது, வருங்கால தம்பி தங்கைகளின் போராட்டம். விளை நிலங்களை கையகப்படுத்தி தொழிற்சாலைகள் அமைப்பது என்பதின் பெயரில் போலியாக செய்வதை அரசு கைவிட வேண்டும். ஜி ஸ்கொயர் (தென்னிந்தியாவின் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம்) பெயரில் ஏராளமான நிலங்களை வாங்கிப் போட்டிருக்கிறீர்கள். அதில் சிப்காட் தொழிற்சாலை கட்டுங்கள். இங்கு வேண்டாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

500 விவசாயிகள்

இந்த போராட்டத்தில் தேத்துரை பச்சையப்பன், எருமைவெட்டி தேவன், 8 வழிச்சாலை எதிர்ப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம், மாநில உழவர் பாசறை சின்னண்ணன், திருமால், பிரகலதா, சீனிவாசன், பச்சையப்பன், சோழன், பெருமாள், சாந்தி, கல்பனா, அண்ணாதுரை, ரேணுகா, முருகன், வெங்கடேசன், பச்சையப்பன், ராஜப்பன், மகேஷ்குமார், செல்வராஜ், தனசேகர், முனுசாமி, காசி, சண்முகம், பாஸ்கர், சரவணன் உள்பட 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பாமக கோட்டையாக கருதப்படும் வந்தவாசியில் சீமானை அழைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளது அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!