Homeசெய்திகள்பிளாட்டுகளாக மாறிய ஓடை- அமைச்சர் ஆய்வில் அதிர்ச்சி

பிளாட்டுகளாக மாறிய ஓடை- அமைச்சர் ஆய்வில் அதிர்ச்சி

பிளாட்டுகளாக மாறிய ஓடை- அமைச்சர் ஆய்வில் அதிர்ச்சி

ஏரியிலிருந்து வெளியேறும் நீர் மற்றொரு ஏரிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது அமைச்சரின் ஆய்வில் தெரிய வந்தது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு ஏரிகள் நிரம்பி வருகின்றன¸ திருவண்ணாமலை நகரை சுற்றியுள்ள வேங்கிக்கால்¸ சேரியந்தல்¸ நொச்சிமலை¸ நாச்சிப்பட்டு¸ கீழ்நாத்தூர் ஆகிய ஏரிகளும் நிரம்பி வருகிறது¸ அதனால் இந்த ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

வேங்கிக்கால் ஏரியிலிருந்து அவர் ஆய்வு பணியை தொடங்கினார். அப்போது வேங்கிக்கால் ஏரி நிரம்பி வெளியேறும் நீர் சிறிது தூரம் வரை கால்வாய் வழியாக சென்று அதன்பிறகு வெளியேற வழியின்றி குடியிருப்பு பகுதிகளை சூழ்வதும்¸ வேங்கிக்கால் ஏரி உபரி நீரை சேரியந்தல் ஏரிக்கு கொண்டு செல்லும் ஓடை பிளாட்டுகளாக மாற்றப்பட்டதும் தெரிய வந்தது. 

சேரியந்தல் ஏரிக்கு தண்ணீரை கொண்டு செல்லும் 3 வழி பாதைகளும் ஆக்கிரமிப்பின் பிடியில் இருப்பதை வரைபடம் மூலம் பார்த்து அதிர்ச்சி அடைந்த அமைச்சர் எ.வ.வேலு¸ ஒரு சிலரின் ஆசையால் அனைவரும் பாதிக்கப்படக் கூடாது என அதிகாரிகளிடம் தெரிவித்து வேங்கிக்கால் ஏரி தண்ணீரை மாற்று பாதை அமைத்து அதன் வழியாக சேரியந்தல் ஏரிக்கு கொண்டு செல்லும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். 

பிறகு சேரியந்தல்¸ நொச்சிமலை ஏரி பகுதிகளிலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சில பகுதிகளில் தண்ணீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் இருப்பது தெரிய வந்தது. 

பிளாட்டுகளாக மாறிய ஓடை- அமைச்சர் ஆய்வில் அதிர்ச்சி

இதையடுத்து பொதுப்ணித்துறை¸ ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை¸ நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாயத்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து நீர்வரத்துக் கால்வாய் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள்¸ அடைப்புகள் ஆகிவற்றினை அகற்றும் பணியினை 10 தினங்களுக்குள் முடித்து எதிர்வரும் காலங்களில் நீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார். 

அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது¸ 

தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர்¸ நவம்பர்¸ டிசம்பர் மாதங்களில் பருவ மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக வடமாவட்டங்களில் ஆண்டுதோறும் பெய்து வரும் மழையால் வெள்ளச்சேதம் ஏற்படுகிறது.

இந்த வெள்ளச்சேதம் ஏற்படுவதை தடுக்க நீர் வரத்து கால்வாய்களை தூர் வாரும்படி புதியதாக ஆட்சி பெறுப்பேற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்¸ நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டார். கடந்த ஆட்சியில் சிறுபாலங்களில் செடிகளும்¸ கொடிகளும் வளர்ந்து நீர்வரத்தினை அடைத்துக் கொண்டுள்ளதை சீர் செய்யாமல் விட்டு விட்டனர். இப்போது அந்த சிறு பாலங்கள் அனைத்தும் சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

வேங்கிக்கால்¸சேரியந்தல்¸சொச்சிமலை¸கீழ்நாத்தூர் ஏரிகள் திருவண்ணாமலை நகரைச் சுற்றி உள்ளன. இவை 100 சதவீதம் நிரம்பி உள்ளது. இவைகள் நிரம்பி நகர பகுதிக்கு வரக்கூடாது என்பதற்காக வரத்து கால்வாய்கள் தூர் வாரப்படுகிறது. வேங்கிக்கால் ஏரியிலிருந்து சேரியந்தல் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயின் தூரம் 1500 மீட்டர் ஆகும். சேரியந்தல் ஏரியிலிருந்து சொச்சிமலை ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயின் தூரம் 1100 மீட்டர் ஆகும். நொச்சிமலை ஏரியிலிருந்து கீழ்நாத்தூர் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயின் தூரம் 3000 மீட்டர் ஆகும்.

பிளாட்டுகளாக மாறிய ஓடை- அமைச்சர் ஆய்வில் அதிர்ச்சி

இந்த ஆய்வின் போது பொதுமக்கள் சிறு¸சிறு பிரச்சனைகளை தெரிவித்தனர். எதிர்வரும் மழை காலத்தில் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருவண்ணாமலை தேரடித் தெருவில் மழை நீர் தேங்குவதை வெளியேற்றும் வகையில் கடந்த ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

திமுகவின்  தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை சுற்றியுள்ள நான்கு மாடவிதிகளும் கான்கீரிட் சாலையாக மாற்றப்பட உள்ளது. இதற்காக ரூ. 5 கோடியில் திட்டமதிப்பிடு தயார் செய்யப்பட்டிருக்கிறது. அப்படி கான்கீரிட் சாலையாக மாற்றப்படும் போது அங்கு விழம் மழை நீர் வெளியேறும் வகையில் திட்டம் தயாரிக்கப்படும். மழை காலம் முடிந்தவுடன் இந்த பணிகள் துவங்கும். அடுத்த ஆண்டு தேரடி வீதியில் மழை நீர் தேங்குகிறது என்ற குற்றச்சாட்டு இருக்காது. 

இவ்வாறு அவர் கூறினார். 

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ்¸ சி.என்.அண்ணாதுரை எம்.பி¸ மு.பெ.கிரி எம்.எல்.ஏ¸ நெடுஞ்சாலை துறை வட்ட கண்காணிப்பாளர் பழனிவேல்¸ உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன்¸ திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி¸ ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ்¸ வட்டார வளர்ச்சி அலுவலர் சு.அருணாசலம்¸ தாசில்தார் எஸ்.சுரேஷ்¸ ஒன்றியக்குழு உறுப்பனரகள் பெ.பக்தவச்சலம்¸ சங்கீதா கார்த்திக்¸ யுவராஜ்¸ ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தி தமிழ்ச்செல்வன்¸ ஆறுமுகம்¸ மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்¸ அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். 

See also  ரூ.1 கோடியே 15 லட்சம் பாக்கி- லயன்ஸ் கிளப் ஆபீசுக்கு சீல்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!