Homeஅரசியல்2 ஆயிரம் பேரை திரட்டி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

2 ஆயிரம் பேரை திரட்டி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

2 ஆயிரம் பேரை திரட்டி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை திரட்டி பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்டம் மாற்றுக் கட்சியினரை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

திருவண்ணாமலை திருவூடல் தெரு வன்னியர் மடம் அருகே திருவண்ணாமலை  தெற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில்¸ திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயியிலில் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வழிபட அனுமதிக்க கோரியும்¸ திருவண்ணமலையில் கடந்த 19 மாதங்களாக கிரிவலத்துக்கு விதித்திருக்கும் தடையை நீக்கக் கோரியும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.ஜீவானந்தம் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.ஜி.காந்தி¸ வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஜெ.எஸ்.செந்தில்குமார்¸ மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.கருணாகரன்¸ மாவட்ட பொதுச் செயலாளர் கே.ரமேஷ்¸ மாவட்ட பொருளாளர் ஜெ.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் எம்.சதீஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். 

மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சிறப்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன்¸ மாநில செயலாளர் அ.பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். 

2 ஆயிரம் பேரை திரட்டி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

இதில் மாவட்ட பார்வையாளர் வி.அருள்¸ கோட்ட அமைப்பு செயலாளர்கள் எஸ்.குணசேகரன்¸ வி.ரமேஷ்¸ தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாஸ்கரன்¸ மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நேரு¸ வடக்கு மாவட்ட தலைவர் ச.ச.வெங்கடேசன்¸ ஐடி பிரிவு மாநில செயலாளர் பிரதீஷ்குமார்¸ பிறமொழி பிரிவு மாநில செயலாளர் எஸ்.ஜம்புகுமார் ஜெயின்¸ முன்னாள் மாவட்ட தலைவர் எம்.ஆர்.தருமன் மற்றும் எம்.எஸ்.சுந்தரமூர்த்தி¸ என்.இறைமாணிக்கம்¸ எம்.அருணை ஆனந்தன் உள்பட மாநில¸ மாவட்ட¸ ஒன்றிய அணி பிரிவு நிர்வாகிகள் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.சேகர் நன்றி கூறினார்.

“ஏமாற்றாதே ஏமாற்றாதே¸இந்துக்களை ஏமாற்றாதே¸ திறந்திடு திறந்திடு அனைத்து நாட்களிலும் கோயிலை திறந்திடு¸ புண்படுத்தாதே¸ புண்படுத்தாதே பக்தர்களின் மனதை புண்படுத்தாதே” போன்ற கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன. 

2 ஆயிரம் பேரை திரட்டி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

அதன் பிறகு கரு.நாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது¸

கொரோனா நேரத்தில் கோயில்கள் மூடப்பட்டதை மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் தற்போது அனைத்து துறைகளும் செயல்படுகிறது. அரசு நிறுவனங்கள்¸தொழிற்கூடங்கள்¸தனியார் நிறுவனங்கள்¸ பஸ் போக்குவரத்து¸ ரயில்¸ ஆட்டோ¸ டாக்ஸி¸ சினிமா தியேட்டர்¸ டாஸ்மாக்¸ பள்ளிக்கூடங்கள்¸  கல்லூரிகள் இயங்கும்போது கோயிலுக்கு மட்டும் தடை என்பது வெட்கக்கேடானது. நயவஞ்சகமானது. தமிழக அரசு உள் நோக்கத்தோடு செயல்படுகிறது. 

அனைத்து நாட்களிலும் கோயில்¸ மசூதி¸ சர்ச் ஆகியவை திறக்கப்பட வேண்டும் அனைத்து பக்தர்களின் மனதையும் புண்படுத்தக் கூடாது என்பதற்காகவே இந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். திருவண்ணாமலையில் இது போன்ற ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் கூடியிருப்பதை நீங்கள் பார்த்து இருக்க மாட்டீர்கள். தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 2 லட்சம் பேர் திரண்டு இருக்கிறார்கள். தமிழக அரசு இனிமேலாவது திருந்த வேண்டும்.தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். பிடிவாதம் இருக்கக் கூடாது. பொதுமக்களின் பக்தி உணர்வுகளை தடுப்பது¸ மனவேதனை படுத்துவது என்பது தமிழக அரசுக்கு கேடு காலமாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தை யொட்டி திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து மாடவீதி முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் கொடியாகவே காணப்பட்டது. பஸ் மூலமாக ஆர்ப்பாட்டத்திற்கு வந்த பாஜக தொண்டர்கள் மத்திய பஸ் நிலையத்திலிருந்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக புறப்பட்டு ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தனர். திமுக¸அதிமுகவையடுத்து பாரதிய ஜனதா கட்சியும் பிரமாண்டமான ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. மாற்று கட்சியினரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

See also  திருவண்ணாமலையில் பா.ஜ.க அதிரடி

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!