Homeஅரசு அறிவிப்புகள்பவுர்ணமி: 12 இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதி

பவுர்ணமி: 12 இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதி

பவுர்ணமி: 12 இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதி

பவுர்ணமியை யொட்டி திருவண்ணாமலையில் குறிப்பிட்ட 12 இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,

5 லட்சம் பக்தர்கள்

அக்னி ஸ்தலங்களின் ஒன்றான அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலயம் அமைந்துள்ள திருவண்ணாமலை நகருக்கு ஐப்பசி மாத பவுர்ணமி தினங்களான 07.11.2022 மற்றும் 08.11.2022 ஆகிய 2 தினங்களில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்ல வருகை தருவார்கள்.

இந்த கிரிவலத்தின் போது பின்வரும் 12 இடங்களில் மட்டுமே தனி நபர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் சார்பில் அன்னதானம் அளிக்க அனுமதி அளிக்கப்படும்.

pournami-allowed-to-give-alms-at-only-12-places
கலெக்டர் முருகேஷ்

12 இடங்களில் மட்டுமே அன்னதானம்

1) திரௌபதி அம்மன் கோயில் அருகில்
2) செங்கம் சாலை சந்திப்பு அருகில் – பக்தர்கள் ஒய்வு கூடம்
3) ஆனாய்பிறந்தான் தூர்வாசர் கோயில் அருகில் ஒய்வு கூடம்
4) ஆனாய் பிறந்தான் ஜோதி விநயாகர் கோயில் எதிரில் பக்தர்கள் ஓய்வு கூடம்
5) அத்தியந்தல் -திருநேர் அண்ணாமலை கோயில் அருகில் பக்கதர்கள் ஓய்வு கூடம்
6) அத்தியந்தல் பழனியான்டவர் கோயில் அருகில் பக்கதர்கள் ஒய்வு கூடம்
7) அத்தியந்தல் சீனுவாசா பள்ளி அருகில் உள்ள காலியிடம்
8) அடிஅண்ணாமலை – அருணகிரி நாதர் திருக்கட்டளை அருகில் பக்கதர்கள் ஓய்வு கூடம்
9) அடிஅண்ணாமலை – கிராம சேவை மைய கட்டிடம் அருகில் பக்கதர்கள் ஓய்வு கூடம்
10) காஞ்சி ரோடு சாலை சந்திப்பில் உள்ள பக்கதர்கள் ஒய்வு கூடம்
11) கிராமிய காவல் நிலையம் அருகில் உள்ள காலியிடம்
12) பஞ்சமுக தரிசனம் அருகில் உள்ள காலியிடம்

See also  போலீஸ் பணிக்கான போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

மேற்குறிப்பிட்ட 12 இடங்களில் அன்னதானம் செய்ய விரும்பும் தனிநபர்கள்,தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் பின்வரும் நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

pournami-allowed-to-give-alms-at-only-12-places

நிபந்தனைகள்

♦ அன்னதானம் அளிக்க விருப்பம் உள்ளவர்கள் திருவண்ணாமலை நகரம், செங்கம் சாலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகம் அல்லது மாவட்டஉணவு பாதுகாப்பு அலுவலரை 04175 – 237416, 98656 89838, 90477 49266 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உதவிகள் பெறலாம்.

எந்தகாரணத்தை முன்னிட்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அன்னதானம் வழங்க இலையால் ஆன தொன்னை மற்றும் பாக்கு மட்டை பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், பிளாஸ்டிக் பாக்கெட் மூலம் குடிநீர் விநியோகிக்கக் கூடாது.

அன்னதானம் வழங்கும் இடத்திலேயே உணவருந்த பயன்படுத்திய பொருட்கள், மீதம் ஆன உணவு பொருட்கள் போட ஏதுவாக குப்பைக் கூடைகளை அன்னதானம் அளிப்பவர்களே எடுத்து வர வேண்டும்.

போலீஸ் மூலம் நடவடிக்கை

சுத்தமானதாகவும், தரமானதாகவும் உள்ள உணவு மற்றும் இதர பொருட்களை கொண்டே அன்னதானம் தயார் செய்ய வேண்டும். முறையாக அன்னதானம் செய்யும் இடங்களில் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை, வருவாய்துறை, காவல் துறை மற்றும் உள்ளாட்சி துறை பணியாளர்களால் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

See also  ஹலோ திருவண்ணாமலை போலீஸ் திட்டம்

அன்னதானம் முடிந்தவுடன் அந்த இடத்தினை முழுமையாக சுத்தம் செய்த பின்னரே செல்ல வேண்டும். அதற்கு ஏற்றவாறு நபர்களை உடன் அழைத்து வர வேண்டும்.

அனுமதி அளிக்கப்பட்ட இடம் தவிர வேறு இடங்களில் அன்னதானம் அளிப்பவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியிருக்கிறார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!