Homeசெய்திகள்கீழ்பென்னாத்தூர்: 10டன் கருப்பு கல்லோடு சிக்கிய லாரி

கீழ்பென்னாத்தூர்: 10டன் கருப்பு கல்லோடு சிக்கிய லாரி

கீழ்பென்னாத்தூர் அருகே லாரியில் 10 டன் கருப்பு கற்கள் கடத்தி செல்ல முயன்ற போது அதிகாரியை பார்த்ததும் டிரைவர் ஓட்டம் பிடித்தார்.

கீழ்பென்னாத்தூர்: 10டன் கருப்பு கல்லோடு சிக்கிய லாரி

திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ஏர்ப்பாக்கம் கிராமம் அருகே, கொளத்தூர் குரூப் கிராம நிர்வாக அதிகாரி ஜெகதீசன் மற்றும் ஊழியர்கள் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு நிலத்தின் அருகே டி.என்.52-பி-2355 என்ற சேலம் மாவட்டம் சங்ககிரி பதிவு எண் உள்ள லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அதிகாரியை பார்த்ததும் டிரைவர் லாரியிலிருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.

கீழ்பென்னாத்தூர்: 10டன் கருப்பு கல்லோடு சிக்கிய லாரி

கிராம நிர்வாக அதிகாரி மற்றும் ஊழியர்கள் லாரியில் ஏறி பார்த்த போது அதில் கருப்பு கற்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த கற்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது?, லாரியின் உரிமையாளர் யார்? என்பது தெரியவில்லை

இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி ஜெகதீசன், கீழ்பென்னாத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேறு டிரைவரை கொண்டு லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.

See also  எதிர்கட்சிகள் வீடியோ எடுப்பார்கள்-உதயநிதி எச்சரிக்கை

அந்த லாரியில் பல லட்சம் மதிப்புள்ள 10 டன்னுக்கு மேல் கருப்பு கற்கள் இருந்தன. லாரியின் பதிவு எண்ணை கொண்டு போலீசார் விசாரித்தில் அதன் உரிமையாளர் பாண்டிச்சேரியில் இருப்பது தெரிய வந்தது.

அவரை போனில் தொடர்பு கொண்ட போது முன்னுக்கு பின் முரணாக பதில் வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கீழ்பென்னாத்தூர்: 10டன் கருப்பு கல்லோடு சிக்கிய லாரி

இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி ஜெகதீசன், கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!