Homeஆன்மீகம்திருவண்ணாமலை: விநாயகர் தேரில் விரிசல்கள்

திருவண்ணாமலை: விநாயகர் தேரில் விரிசல்கள்

திருவண்ணாமலை விநாயகர் தேரில் உள்ள விரிசல்கள் குறித்து இந்து சமய அறநிலையத்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. 3ந் தேதி பஞ்சமூர்த்திகளின் தேரோட்டமும், 6ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும் அன்று மாலை 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை காண இந்த வருடம் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அண்ணாமலையார் கோவில் நிர்வாகம், நகராட்சி, ஊராட்சிகள் மூலம் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் அடிக்கடி நடந்து வருகிறது. கொரோனா காலத்தில் கடந்த 2 வருடங்களாக தேர்கள் ஓடாமல் இருப்பதால் அதிகாரிகள் சோதனை ஓட்டத்தை நடத்தி தேர்களின் உறுதி தன்மையை பரிசோதிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.

See also  அண்ணாமலையார் கோயிலில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மோட்ச தீபம்

நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் தேரோட்டத்தின் போது சிறு அசாம்பாவிதம் கூட நடக்க கூடாது, ஒவ்வொரு தேர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.

முருகர் தேரின் பீடம் புதியதாக அமைக்கப்பட்டிருப்பதால் அந்த தேர் மட்டும் விரைவில் வெள்ளோட்டம் விடப்படும் என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேரோட்டத்தின் போது முதலாவதாக புறப்படும் விநாயகர் தேரில் விரிசல்கள் காணப்படுவது தெரிய வந்துள்ளது.

திருவண்ணாமலை: விநாயகர் தேரில் விரிசல்கள்

திருவண்ணாமலை: விநாயகர் தேரில் விரிசல்கள்

இது குறித்து தேர்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, விநாயகர் தேரில் உள்ள விரிசல்கள் பற்றியும், மற்ற தேர்களில் உள்ள சிறு,சிறு குறைபாடுகள் குறித்தும் இந்து சமய அறநிலையத்துறைக்கு தெரிவித்து விட்டோம். இதை சரிசெய்வது அவர்களது பொறுப்பு. இப்பணி முடிந்ததும் தேரோட்டத்திற்கு முதல்நாள் தேர்களை பரிசோதிப்போம். அப்போது அனைத்தும் சரியாக இருந்தால் தேர்களை இயக்கலாம் என சான்றிதழ் அளிப்போம் என தெரிவித்தார்.

2012ம் ஆண்டு திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டத்தின் போது முருகர் தேரின் பீடத்தில் ஏற்பட்ட விரிசலால் தேரோட்டம் தடைபட்டது. அப்பகுதியில் இரும்பு சட்டங்களை வைத்து வெல்டிங் செய்யப்பட்ட பிறகு தேரோட்டம் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!