Homeசெய்திகள்தேச நலனுக்காக கிரிவலப்பாதையில் அங்கப்பிரதட்சணம்

தேச நலனுக்காக கிரிவலப்பாதையில் அங்கப்பிரதட்சணம்

தேச நலனுக்காக கிரிவலப்பாதையில் அங்கப்பிரதட்சணம்

தேசநலனுக்காகவும்¸ பிரதமர் மோடி நீடுழி வாழவும் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 14 கிலோ மீட்டர் தூரம் பா.ஜ.க நிர்வாகி அங்கப்பிரதட்சனம் வந்தார். 

பிரதமர் மோடி நேற்று (17-09-2921) தனது 71வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்¸ எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர். 

மோடியின் பிறந்த நாளான நேற்று இந்தியாவில் 2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் பா.ஜ.கவினர் அவரது பிறந்த நாளை சேவை தினமாக கடைபிடித்தனர். சென்னையில் மத்திய அமைச்சர் எல்.முருகன்¸ பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜ.கவினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் 71 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. 

சத்யராஜ்

திருவண்ணாமலையில் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் அங்கப்பிரதட்சணம் வந்தார். அவரது பெயர் சத்யராஜ்.திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பா.ஜ.கவில் ஆரணி கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். 

தேச நலனுக்காகவும்¸ இந்திய ராணுவ வீரர்களின் நலன் மற்றும் அவர்களது குடும்பத்தின் நலனுக்காகவும்¸ பிரதமர் மோடி நோய் நொடியின்றி நீண்ட நாட்கள் வாழவும் நேற்று மாலை அண்ணாமலையாருக்கு வேண்டிக் கொண்டு ராஜகோபுரம் முன்பிருந்து அங்கப்பிரதட்சணம் துவங்கினார். திருவண்ணாமலை கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன் அங்கப்பிரதட்சணத்தை துவக்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பா.ஜ.க¸ ஆரணி கிழக்கு ஒன்றிய தலைவர் சதீஷ்¸ ஒன்றிய பொதுச் செயலாளர் அருண்¸ வடக்கு மாவட்ட துணை தலைவர் கோபி¸ வடக்கு மாவட்ட பா.ஜ.க செயலாளர் வழக்கறிஞர் ஜெயகோபி¸ பொருளாளர் கோபி உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

தேச நலனுக்காக கிரிவலப்பாதையில் அங்கப்பிரதட்சணம்

அண்ணாமலையார் மலையை சுற்றி அவர் “அண்ணாமலையாருக்கு அரோகரா” என்ற பக்தி முழக்கத்தோடு அங்கப்பிரதட்சணமாக உருண்டு வந்தார். 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையை அங்கப்பிரதட்சணமாக வலம் வந்த சத்யராஜ்¸ அண்ணாமலையார் கோயில் முன்பு அங்கப்பிரதட்சணத்தை நிறைவு செய்தார். 

See also  நள்ளிரவில் கடைகளுக்கு சீல்-வியாபாரிகள் கொதிப்பு

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!