Homeஆன்மீகம்அண்ணாமலையார் கோயிலில் சமய நூலகம்

அண்ணாமலையார் கோயிலில் சமய நூலகம்

அண்ணாமலையார் கோயிலில் சமய நூலகம் குறித்து சரியான அறிவிப்பு இல்லாததால் குறைவான பக்தர்களே நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

உலகமெல்லாம் போற்றப்படுவது சைவ சமயம். சிறந்த சைவத்திருத்தல நகரமாக விளங்குவது திருவண்ணாமலை.

திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் முதலானோர் அண்ணாமலையாரை வந்து தரிசித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற 5 பஞ்ச பூதங்களுக்கும் முன்னோர்கள் தலம் அமைத்திருக்கின்றனர். இந்த பஞ்ச பூத தலங்களில் தீ என்கிற அக்னித்தலமாக திருவண்ணாமலையை நம் முன்னோர்கள் வழிபட்டனர்.

அண்ணாமலையார் கோயிலில் சைவ நூலகம்

அக்னியே அனைத்திற்கும் மூலம். ஈஸ்வரன் சிவன் அருணாசலேஸ்வரராக மலை உருவில் காட்சி வழங்கும் திருவண்ணாமலை பஞ்சபூத ஸ்தலங்களுள் மிகவும் விசேஷமானது. திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் தலம் என்பது நம்பிக்கையாக உள்ளது.

மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் பலகாலம் தங்கியிருந்து (வைணவத்தில் மார்கழி மாதத்திற்கு திருப்பாவை இருப்பது போல) சைவத்திற்கு மார்கழியில் திருவெம்பாவை பாடல்களையும் திருவம்மானை பதிகங்களையும் இயற்றி உள்ளார். கிரிவலப்பாதையில் அடிஅண்ணாமலையில் இவருக்கு கோயில் உள்ளது.

See also  உணவின்றி வாழ்ந்து வரும் நிர்வாண சாமியார்

நால்வர் என்று அழைக்கப்படும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் தேவாரம் பதிகங்களைப் பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் சிவபெருமான் என்றாலும், இங்குள்ள முருகன் மீது அருணகிரி நாதர் பாடல்களைப் பாடியுள்ளார்.

பல்வேறு நகரங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இந்நகருக்கு வந்து வாழ்ந்து சமாதியடைந்துள்ளார்கள். அவர்களில் ரமணர், சேஷாத்திரி சாமிகள், விசிறி சாமிகள், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

அண்ணாமலையார் கோயிலில் சைவ நூலகம்

இப்படி புகழ் பெற்ற திருவண்ணாமலையை பற்றிய நூல்கள் மற்றும் சைவம் சம்மந்தப்பட்ட நூல்களை திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் சமய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

சமய நூலகம் அம்மணியம்மன் கோபுரம் அருகே உள்ள கோயிலுக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு ஒரு நூலகர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

திருப்புகழ், முருகன் பாடல்கள், அல்லல் போக்கும் அற்புத ஆலயங்கள், ஸ்ரீகந்த புராணம், குமரேச சதகம், திருமுருகாற்றுப்படை, அண்ணாமலையார் வரலாற்று நூல்கள், தேவார திருத்தலங்கள், சிவ ஸ்தலங்கள் 108, ஆதிசங்கரரின் ப்ரச்சோனத்ர ரத்னமாலிகா, சனீஸ்வர தோஷம் நீக்கும் நளபுராணம், இந்து சமய பண்டிகைகளின் வழிபாட்டு முறைகள், காசி முதல் ராமேஸ்வரம் வரை பயண வழிகாட்டி, பட்டினத்தார் பாடல்கள், வாழ்க்கையை வளமாக்கும் திருமுறைகள், தேவாரம், திருக்கோவையார், பதினொராம் திருமுறை, திருமூலர் திருமந்திரம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் என பல தலைப்புகளில் இங்கு நூல்கள் உள்ளன.

See also  சித்ரா பவுர்ணமி:திருவண்ணாமலைக்கு 14 ரயில்கள் இயக்கம்

இந்த நூலகத்தை கடந்த 15ந் தேதி அன்று அமைச்சர்கள் சேகர்பாபு, எ.வ.வேலு திறந்து வைத்தார்கள். சரியான அளவில் விளம்பரப்படுத்தாததால் இந்த நூலகம் அமைந்திருப்பது பலருக்கு தெரியவில்லை.

அண்ணாமலையார் கோயிலில் சைவ நூலகம்

புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இன்றைய தலைமுறையினரிடத்தில் குறைந்து விட்டாலும், ஆன்மீக நூல்களை வாசிக்கும் பழக்கம் பக்தர்களிடத்தில் இன்றளவும் இருந்து வருகிறது. அண்ணாமலையார் கோயிலில் சமய நூலகம் அமைக்கப்பட்டிருப்பது குறித்து விளம்பர பலகை ஏதும் வைக்கப்படாததால் பெரும்பாலான பக்தர்களுக்கு நூலகம் அமைந்திருப்பது தெரியவில்லை.

தரிசனம் முடிந்து திரும்பும் போதோ, கோயில் மூடப்பட்ட சமயத்திலோ அல்லது விரத நாட்களிலோ பக்தர்கள் இங்கு வந்து புத்தகம் படிக்க வாய்ப்புள்ளது. இன்னும் அதிக அளவு புத்தகங்கள் இங்கு வைக்கப்பட வேண்டும்,

சமய நூலகம் எப்போது திறந்திருக்கும்?, எந்த நேரத்தில் மூடப்பட்டிருக்கும்? என்பது குறித்த அறிவிப்பு பலகை இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று அண்ணாமலையார் பக்தர் ஒருவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

செ.அருணாசலம்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!