Homeஅரசு அறிவிப்புகள்ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஆட்டோ, வேன், லாரி ஏலம்

ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஆட்டோ, வேன், லாரி ஏலம்

ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஆட்டோ, வேன், லாரி ஏலம்

திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள ஆட்டோ, வேன், லாரி ஆகியவை ஏலம் விடப்படுகிறது. 

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிறைபிடிக்கப்பட்ட ஆட்டோ, வேன், சரக்கு வாகனம் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவற்றை அதன்  உரிமையாளர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் இணக்க கட்டணம் செலுத்தி வாகன விடுவித்து செல்லாத நிலை உள்ளது. 

எனவே வருகிற 27.07.2022 அன்று காலை 11 மணிக்கு திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பொது ஏல விலை நிர்ணய குழுவினரால் அந்த வாகனங்கள் பொது ஏலத்தில் விட உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏலம் 4 தொகுதிகளாக மட்டுமே விடப்படும். அனைத்து வாகனங்களையும் (AS IS WHERE IS CONDITION) அலுவலக வேலை நாட்களில், அலுவலக வேலை நேரத்தில் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பார்வையிடலாம். 

பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களின் ஆதார் அட்டை, பான்கார்டு, புகைப்படம் 2, பதிவு தொகை ரூ.100 திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம். பதிவு கட்டணம் திருப்பி அளிக்கப்படமாட்டாது. வாகனங்கள் ஏலம் எடுத்தவர்கள் ஏலம் முடித்தவுடன் ஏலத்தொகையில் 25 சதவீதத்தை முன்பணமாக செலுத்த வேண்டும். பின்னர் 7 தினங்களுக்குள் மீதமுள்ள தொகையை செலுத்தி வாகனத்தை எடுத்துச் செல்ல வேண்டும். ஏல தொகையில் ஜிஎஸ்டி (GST18 சதவீதத்தை விற்பனை வரியாக செலுத்த வேண்டும். 

ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஆட்டோ, வேன், லாரி ஏலம்

ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஆட்டோ, வேன், லாரி ஏலம்

33 ஆட்டோக்கள், 4 மேக்சி கேப் வேன்கள், 10 சரக்கு லாரிகள் ஏலம் விடப்பட உள்ளது. 

வாகன விவரங்கள் அறிய https://tnsta.gov.in/homepage என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் பொது ஏலத்தில் விடப்படும் வாகனங்களின் விவரங்களை எக்காரணத்தை கொண்டும் மீளவும் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

See also  உழவர் சந்தை 19ந் தேதி முதல் செயல்படும்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!