Homeஅரசு அறிவிப்புகள்உதவித் தொகைக்கான மனுக்களை பெற சிறப்பு முகாம்

உதவித் தொகைக்கான மனுக்களை பெற சிறப்பு முகாம்

உதவித் தொகைக்கான மனுக்களை பெற சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 தாலுக்காக்களிலும் உதவித் தொகைக்கான மனுக்களை வாங்க ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. 

நாளை (08-09-2021) நடைபெறும் இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு¸ திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் ஆகியோரின் அறிவுரையின் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து சமூக பாதுகாப்புத் திட்ட தனிவட்டாட்சியர்கள் அலுவலகத்தின் மூலம் முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகை¸ முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டம்¸ முதலமைச்சரின் பொதுநிவாரண கல்வி உதவித்தொகை (தொழிற்கல்வி¸ B.E. B.Sc Nursing) ஆகிய திட்டங்களில் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்களை நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த முகாம் பிரதிவாரம் புதன்கிழமை நடைபெறும். ஒவ்வொரு வட்டத்திலும் உள்வட்டம் வாரியாக சிறப்பு முகாம்களை நடத்தி பொதுமக்களிடம் மனுக்களை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் (நாளை) 08.09.2021 புதன்கிழமை கீழ்கண்ட இடங்களில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. எனவே¸ தகுதியுடைய நபர்கள் அனைவரும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார். 

உதவித் தொகைக்கான மனுக்களை பெற சிறப்பு முகாம்

முகாம் நடைபெறும் இடங்கள் 

1. திருவண்ணாமலை வடக்கு (திருவண்ணாமலை). இடம்- வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு

2. செங்கம். இடம்- இறையூர் அங்கன்வாடி மையம்

3. கீழ்பென்னாத்தூர். இடம்- சோமாசிபாடி கிராம நிர்வாக அலுவலகம்

4. தண்டராம்பட்டு. இடம்- தானிப்பாடி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு

5. ஆரணி. இடம்- கண்ணமங்கலம் அய்யம்பாளையம்¸ கிராம நிர்வாக அலுவலகம்.

6. போளுர். இடம்- மொடையூர் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு

7. கலசப்பாக்கம். இடம்- கலசப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு

8. ஜமுனாமரத்தூர். இடம்- ஜமுனாமரத்தூர் வட்டாட்சியர் அலுவலகம்

9. செய்யாறு. இடம்- பரிதிபுரம்¸ வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு

10. சேத்துப்பட்டு. இடம்- கொழப்பலூர் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு

11. வந்தவாசி. இடம்- ஓசூர்¸ கிராம நிர்வாக அலுவலகம்

12. வெம்பாக்கம். இடம்- பெருங்காட்டூர் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு

See also  நெல் கொள்முதலில் ரூ.8கோடி முறைகேடு:அரசு புது உத்தரவு

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!