கிராம உதவியாளர் பணி நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு நடைபெறும் இடங்கள் குறித்து கலெக்டர் அறிவித்துள்ளார்.
இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணி நேரடி நியமனம் தொடர்பான விண்ணப்பதாரர்களுக்கு 30.11.2022 அன்று நடைபெற இருந்த எழுத்து தேர்வு தேதி மாறுதல் செய்யப்பட்டு எதிர்வரும் 4.12.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முற்பகல் நடத்தப்பட உள்ளது.
12 வட்டங்களில் எழுத்து தேர்வு
இதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் கீழ்கண்ட அட்டவணைப்படி உள்ள தேர்வு மையங்களில் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு 4.12.2022 அன்று நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை வட்டத்தில் அருணை பொறியியல் கல்லூரி திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கீழ்பென்னாத்தூர், சாஸ்திரா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி கீழ்பென்னாத்தூர் மதுரா கருங்காலிகுப்பம், ஜெயம் பி.எட். கல்லூரி கீழ்பென்னாத்தூர், செங்கம் வட்டத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி செங்கம், மகரிஷி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, செங்கம்,
தண்டராம்பட்டு வட்டத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தண்டராம்பட்டு, பாரத் வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கீழ்ராவந்தவாடி கிராமம் தண்டராம்பட்டு, போளுர் வட்டத்தில் ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி வெண்மணி கிராமம் போளூர். ஸ்ரீரேணுகாம்பாள் கல்வியியல் கல்லூரி சி.சி.ரோடு எட்டிவாடி கிராமம் போளுர், அண்ணாமலையார் பொறியியல் கல்லூரி, சேத்பட் – போளூர் ரோடு மொடையூர்,
கலசபாக்கம் வட்டத்தில் அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தென்பள்ளிப்பட்டு, ஜமுனாமரத்தூர் வட்டத்தில் ஜவ்வாதுமலை பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி கோவிலூர் மதுரா குணிகாந்தூர் கிராமம். ஆரணி- சுப்பிரமணிய சாஸ்திரி மேல்நிலைப்பள்ளி ஆரணி நகரம் மற்றும் வட்டம்.
வந்தவாசி வட்டத்தில் திருவள்ளுவர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி பொன்னூர் கிராமம், வந்தவாசி, கிங் நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தெள்ளார் கிராமம், வந்தவாசி, கிங்ஸ்டன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி புதிய தெரு, வந்தவாசி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பழைய பேருந்து நிலையம் அருகில் வந்தவாசி.
செய்யார் வட்டத்தில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பங்களா தெரு, செய்யார், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி காந்தி ரோடு, செய்யார், இந்தோ அமெரிக்கன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி காஞ்சிபுரம் ரோடு செய்யார்.
சேத்பட்டு வட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, பழம்பேட்டை, சேத்பட், செயின்ட் அன்னீஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேத்பட், டோமினிக் சேவியோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சேத்பட், வெம்பாக்கம் வட்டத்தில் மீனாட்சி அம்மாள் பொறியியல் கல்லூரி, வடமாவந்தல் கிராமம், வெம்பாக்கம், தூசி பாலிடெக்னிக் கல்லூரி பெரியார் நகர்,பல்லாவரம் சாலை, வெம்பாக்கம்
மேற்படி கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பதாரர்கள் 4.12.2022 அன்று நடைபெற உள்ள எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை (Hall Ticket) இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது பதிவு செய்த அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி இவற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழக அரசின் இணையதளம் http://www.tn.gov.in வருவாய் நிருவாகத் துறையின் இணையதளம் http://cra.tn.gov.in மற்றும் திருவண்ணாமலை மாவட்ட இணையதளம் https://tiruvannamalai.nic.in https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174 மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
விண்ணப்பதாரர்கள் பின்வருமாறு அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.
இந்நேர்வுக்கான அனுமதி முற்றிலும் தற்காலிகமானது. ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் உள்ள உரிமைக்கோரல்களுடன் தொடர்புடைய பிற விவரங்கள் ஆகியவற்றின் முடிவுகளுக்கு உட்பட்டது.
விண்ணப்பதார்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் எவரும் தேர்வு அறைக்குள் காலை 9.50 க்குப் பின் அனுமதிக்கப்பட மாட்டார்கள் மற்றும் காலை10.50 க்கு முன் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்,
விண்ணப்பதாரர் தேர்வுக்கான அனுமதிச்சீட்டினை தேர்வு அறைக்கு தவறாமல் கொண்டு வர வேண்டும். இந்த தேர்வுக்கு உரிய அனுமதிசீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்,.விண்ணப்பதாரர் கருப்பு பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அனுமதி சீட்டு மற்றும் கருப்பு பால் பாயின்ட் பேனாவைத் தவிர வேறு எதையும் தேர்வு அறைக்குள் கொண்டு வரக்கூடாது, விண்ணப்பதாரர்கள் அலைபேசி, புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்கு கொண்டு வரக்கூடாது.
மேலும் கிராம உதவியாளர் பணி விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு மையத்தில் மேற்படி எழுத்து தேர்வு 4.12.2022 காலை 11.00 மணிக்கு முடிவுற்றதும் விண்ணப்பதாரர்களின் மிதிவண்டி ஓட்டும் திறன் பரிசோதிக்கும் தேர்வு மேற்படி தேர்வு மையத்தில் நடைபெற உள்ளது
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி…