Homeஅரசு அறிவிப்புகள்அறநிலையத்துறை சார்பில் கலசப்பாக்கத்தில் கல்லூரி

அறநிலையத்துறை சார்பில் கலசப்பாக்கத்தில் கல்லூரி

அறநிலையத்துறை சார்பில் கலசப்பாக்கத்தில் புதிய கல்லூரி

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கலசப்பாக்கத்தில் புதியதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அண்ணாமலையார் கோயிலில் முதலுதவி மையங்கள் அமைக்கப்படும் என்றும்¸ படவேட்டில் ரூ.3கோடியிலும்¸ செங்கத்தில் ரூ.2 கோடியிலும் புதியதாக திருமண மண்டபங்கள் கட்டப்படும் எனவும் சட்டமன்றத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார். 

பி.கே.சேகர்பாபு 

மா.மதிவேந்தன்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (04.09.2021) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் 2021-22 ஆம் ஆண்டிற்கான தங்கள்  துறை சார்ந்த மானியக் கோரிக்கையின் போது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அறிவித்த திட்டங்கள் குறித்த விவரங்கள் வருமாறு¸

இந்து சமய அறநிலையத்துறை

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலின் மின்வசதி ரூபாய்.90 இலட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.

திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம்¸ அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வணிக வளாகம் ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கட்டப்படும்.

See also  கிரிவலம் செல்ல நிபந்தனைகள்-கலெக்டர் அறிவிப்பு

அருள்மிகுஅருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் முதலுதவி மருத்துவ மையங்கள் அமையவுள்ளது. 

அறநிலையத்துறை சார்பில் கலசப்பாக்கத்தில் புதிய கல்லூரி

திருவண்ணாமலை மாவட்டம் அ.கோ.படைவீடு¸ அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் புதிய திருமண மண்டபம் ரூபாய் 3கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

திருவண்ணாமலை மாவட்டம் புதூர் செங்கம்¸ அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் புதிய திருமண மண்டபம் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

குடமுழுக்கு தொடர்பான திருப்பணிகள் செய்யப்படும் கோவில்கள் 

அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில்¸ ஆவணியாபுரம் சேத்துப்பட்டு வட்டம்¸ அருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில் கஸ்தாம்பாடி போளுர் வட்டம்¸ அருள்மிகு பட்சீஸ்வரர் திருக்கோயில் பரிதிபுரம் செய்யார் வட்டம்¸ அருள்மிகு பூத நாராயணபெருமாள் கோயில்¸ தான்தோன்றீஸ்வரர்¸ வல்லபவிநாயகர் திருக்கோயில¸ காமாட்சிஅம்மன் திருக்கோயில்¸ திருவண்ணாமலை நகர் மற்றும் அருள்மிகு தர்மராஜ¸ மாரியம்மன் திருக்கோயில் இரும்பேடு ஆரணிவட்டம்.

திருத்தேர் காணும் திருக்கோயில்கள் அருள்மிகு ஆதிகேஸ்வரர் பெருமாள் கோயில்¸ இராந்தம் கொரட்டுர் ஆரணிவட்டம்¸ அருள்மிகு போர்மன்னலிங்கேஸ்வரர் திருக்கோயில்¸ மங்கலம் கீழ்பெண்ணாத்தூர் வட்டம்¸

See also  10 நாட்களுக்கு மாலை 5 மணிக்கு மேல் கடைகள் மூடப்படும்

பெரியகிளாம்பாடி ரேணுகாம்பாள் திருக்கோயில்¸ மோட்டூர் எலத்தூர் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருக்குளத்திருப்பணிகள் செய்யப்படும்.

அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில்¸தேசூர் வந்தவாசி வட்டம் திருப்பணிகள் செய்யப்படும்.

சுற்றுலாத்துறை

ஜவ்வாது மலையில் சுற்று சூழலுடன் கூடிய தங்குமிடங்கள்¸ பூங்காக்கள்¸ பல்வேறு சாகச விளையாட்டுகளை ஏற்றுபடுத்தல்¸ பீமன் நீர்வீழ்ச்சி பகுதியை மேம்பாடுத்தல் மற்றும் ஜமுனாமரத்தூர் ஏரியல் புதிய படகுக் குழாம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு திருவண்ணாமலை மாவட்டத்திற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!