Homeசெய்திகள்என்ஜினீயர் வீட்டில் திருடு போனது 65 பவுன் நகையா?

என்ஜினீயர் வீட்டில் திருடு போனது 65 பவுன் நகையா?

என்ஜினீயர் வீட்டில் திருடு போனது 65 பவுன் நகையா?

திருவண்ணாமலையில் என்ஜினீயர் வீட்டில் திருடு போனது 65 பவுன் நகையா?என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தென்றல் நகர் வள்ளலார் நகரில் வசித்து வருபவர் சிவானந்தம் (62). நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்(NLC) பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகன் பாலமுருகன் (27) சென்னையில் உள்ள ஹூண்டாய் கார் கம்பெனியில் என்ஜினீயராக உள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவானந்தம் வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் சேத்துப்பட்டு அருகில் உள்ள நம்மேடு கிராமத்தில் இருக்கும் தனது நிலத்திற்கு சென்று விட்டார். அங்கிருந்து பாலமுருகனின் மனைவி தீபா¸ போளுரில் உள்ள தனது தந்தையும்¸ வழக்கறிஞருமான ஈஸ்வரனை பார்ப்பதற்காக சென்று விட்டார். 

என்ஜினீயர் வீட்டில் திருடு போனது 65 பவுன் நகையா?

பிறகு தீபா¸ இன்று(29-08-2021) கிருத்திகையை முன்னிட்டு தனது தந்தை குடும்பத்தாருடன் சோமாசிபாடி முருகர் கோயிலுக்கு புறப்பட்டு சென்றார். வழியில் தென்றல் நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை¸ உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்சுருதி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த கொள்ளையில் துப்பு துலக்க வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் ரெயில்வே லைன் வரை ஓடி நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள்¸ வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். 

என்ஜினீயர் வீட்டில் திருடு போனது 65 பவுன் நகையா?
என்ஜினீயர் வீட்டில் திருடு போனது 65 பவுன் நகையா?

பிரோவில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகை ரூ.12 ஆயிரம் திருடு போனதாக வீட்டின் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீஸ் தரப்பில் 15 பவுன் நகை மட்டுமே திருடு போனதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி தெரிவித்துள்ளார். 

இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் வீடுகளை பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள் தங்களது பெயர்¸ முகவரியை அந்தந்த ஏரியாக்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்தது. பதிவு செய்யப்படும் வீடுகளை இரவு ரோந்துக்கு செல்லும் போலீசார் கூடுதல் கவனத்தை செலுத்தி கண்காணிப்பார்கள். இந்த நடைமுறையை மீண்டும் கொண்டு வந்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி பூட்டப்பட்ட வீடுகளை நோட்டம் விட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருவதை தடுத்திட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

See also  12 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்த டேம் தண்ணீர்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!