Homeஅரசு அறிவிப்புகள்கடைகள் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி

கடைகள் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி

கடைகள் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி

திருவண்ணாமலை பகுதிகளில் வணிக நிறுவனங்கள் இரவு 10 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள்¸அணைகளை திறப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் இன்று (29-08-2021) வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காக ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் 01.09.2021 முதல் பின்வரும் விவரப்படி தளர்வுகள் அளிக்கப்படுவதுடன் சில கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

திருவண்ணாமலை நகரம் மற்றும் காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில் ஏற்கனவே இரவு 08.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள்¸ உணவகங்கள்¸ பேக்கரிகள் மற்றும் தேநீர் கடைகள் 01.09.2021 முதல் இரவு 10.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

உணவங்கள்¸ பேக்கரிகள் மற்றும் தேநீர் கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி மற்றும் அரசின் இதர நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவருந்தவும், தேநீர் சாப்பிடவும் அனுமதிக்கப்படுவார்கள்.

கடைகள்¸ உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய சம்மந்தப்பட்ட உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும்.

கடைகள் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி

கடை , உணவக உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

ஆய்வின் போது கடை, உணவக உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணியாதது மற்றும் தடுப்பூசி போடாமல் இருப்பது கண்டறிப்பட்டால் அபராதம் விதிப்பதுடன் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மிகக்கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுது போக்கு பூங்காக்கள்¸ நீச்சல் குளங்கள்¸ அணைகள் ஆகியன பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை 05.09.2021 வரை நீட்டிக்கப்படுகிறது.

பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறும், மாவட்ட நிர்வாகத்தின் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரேனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய அனைவரும் உதவிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

See also  17ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!