திருவண்ணாமலை மாவட்டத்தில் ஐ.டி.ஐயில் வெல்டர் பயிற்சியில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸
வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் 15.09.2021 வரை காலியாக உள்ள பற்ற வைப்பவர் பிரிவு பயிற்சி இடங்களில் நேரடி சேர்க்கை செய்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்காக அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையத்திற்கு வருகைபுரிந்து சேர்க்கை தொடர்பான விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:-
1.8th/10th Mark sheet (எட்டாம் வகுப்பு¸ பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) 8th/10th Mark sheet (9th standard marks in case of 2021 10thpassed out candidates)
2. Transfer Certificae (மாற்றுச்சான்றிதழ்)
3. Community Certificate (சாதிச் சான்றிதழ்)
4. Priority Reservation Certificate (முன்னுரிமை சான்றிதழ்)
5. Passport Size Photo & Signature
இணைய வழியாக விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கு தேவையான (Debit card / Credit Card / Gpay/ Net Banking) ஏதேனும் ஒன்றின் மூலம் செலுத்த வேண்டும். உதவி மையத்திற்கு வருகைபுரியும் மாணவர்கள் பெற்றோர்கள் பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்கவேண்டும்.
கல்வி தகுதி :
இரண்டாண்டு தொழிற் பிரிவுகளுக்கு(Fitter, Turner,Machinist, MMV, Electrician) 10-ம் வகுப்பு தேர்ச்சி.
ஓராண்டு தொழிற் பிரிவு -(Welder) 8-ம்வகுப்பு தேர்ச்சி மற்றும்¸ 10-ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு
14 வயது முதல் அரசு நிர்ணயத்தவாறு
அரசு பழங்குடியினர் தொழிற் பயிற்சி நிலையம் ஜமுனாமரத்தூர் சேர்க்கை செய்யப்படும் தொழிற் பரிவுகள்
கல்வி தகுதி
இரண்டாண்டு தொழிற் பிரிவுகளுக்கு(Fitter, Turner,Machinist, MMV, Electrician) 10-ம் வகுப்பு தேர்ச்சி.
இரண்டாண்டு தொழிற் பிரிவு (Wireman) 8-ம் வகுப்பு தேர்ச்சி.
ஓராண்டு தொழிற் பிரிவு – (Welder, Plumber) 8-ம் வகுப்பு தேர்ச்சி.
வயது வரம்பு
14 வயது முதல் அரசு நிர்ணயத்தவாறு
திருவண்ணாமலை முதல்வர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்¸ மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் அலுவலகம்¸ மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ஆகிய சேர்க்கை செய்யப்படும் உதவி மையங்களை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.