Homeசெய்திகள்பர்வதமலையில் தூத்துக்குடி துறைமுக ஊழியர் உயிரிழப்பு

பர்வதமலையில் தூத்துக்குடி துறைமுக ஊழியர் உயிரிழப்பு

பர்வதமலையில் ஏறி மகாதீபத்தை தரிசிக்க சென்ற தூத்துக்குடி துறைமுக ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது பற்றிய விவரம் வருமாறு,

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்த தென்மகாதேவ மங்கலத்தில் 4560 அடி உயரத்தில் பருவதமலை அமைந்திருக்கிறது. இந்த மலை உச்சியில் மல்லிகார்ஜூனர் மற்றும் பிரம்மராம்பிகை கோயில் அமைந்திருக்கிறது.

திருவண்ணாமலையை போல் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் 4560 அடி உயர மலையை ஏறி சாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. பர்வதமலையில் மலையேற ஓரளவுக்கு மட்டுமே பாதை வசதி உள்ளது. மலையின் மேல்நோக்கி செல்லும் பாதை செங்குத்தாக காணப்படும். குமரி நெட்டு, கடப்பாறை நெட்டு பகுதிகளில் கம்பிகளையும், கடப்பாறைகளையும் பிடித்து மேலே ஏறிச் செல்ல வேண்டும்.

நேற்று கார்த்திகை தீபத்தை யொட்டி பர்வதமலையில் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை மீது ஏறிச் சென்றனர்.

இவர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த பொன்னுசாமியும்(வயது 40) ஒருவர். தூத்துக்குடி துறைமுகத்தில் பணிபுரிந்து வந்த பொன்னுசாமி, தனது உறவினர்கள் 4 பேருடன் நேற்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்ட மகாதீபத்தை தரிசிக்க பர்வதமலைக்கு சென்றார்.

See also  பழங்குடியின பள்ளிக்கு கவர்னர் ரூ.50 லட்சம் நிதி

பர்வதமலையில் தூத்துக்குடி துறைமுக ஊழியர் உயிரிழப்பு

மலை உச்சியை நிமிர்ந்து பார்த்த போது திடீரென அவருக்கு பயம் ஏற்பட்டது. இதனால் ஏணிப்படியில் ஏறிக் கொண்டிருந்த அவர் இதற்கு மேல் என்னால் ஏற முடியவில்லை என உறவினர்களிடம் கூறிவிட்டு கீழே இறங்க முயன்றதாகவும், அப்போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

மயங்கி விழுந்த பொன்னுசாமி அங்கேயே பரிதாபமாக உயிரிழுந்தார்.

தகவல் கிடைத்ததும் கடலாடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்மந்தமாக அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த பொன்னுசாமிக்கு பாமாருக்மணி வயது (31) என்ற மனைவியும், சரவணன் (6) என்ற மகனும், ஸ்ரீ (2) என்ற மகளும் உள்ளனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!