திருவண்ணாமலை மாவட்டத்திலேயே தடுப்பூசி போடும் பணியில் செங்கம் முதலிடம் வகிக்கிறது. இதற்காக அதிகாரிகளுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
50 ஆயிரம் பேர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தி செங்கம் மருத்துவ வட்டாரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளது.
கோவிட் 19 நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் தீவரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக திருவண்ணாமலை¸ மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்சின் தலைமையில் அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக பொதுமக்களுக்கு கொரானா தடுப்பூசி செலுத்துவதில் அடைந்துள்ள முன்னேற்றத்தை வேகப்படுத்தியும்¸ நோய் தொற்றினை தடுக்கும் விதமாக அரசு அவ்வப்போது வழங்கி வரும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துதல்¸ கண்காணித்தலால் நோய் தொற்று பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. கோவிட் 19 நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் மிக முக்கிய அம்சமாக விளங்கும் கொரானா நோய் தடுப்பூசி செலுத்துதல் பணியும் மிகுந்த அக்கறையோடு மேற்கொள்ளபட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மருத்துவ வட்டாரத்தில் மட்டும் 24.08.2021 முற்பகல் வரை 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையை கடந்த நிலையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் வட்டாரம் முதன்மை வகிக்கிறது.
செங்கம் மருத்துவ வட்டாரத்தில் பணிபுரிந்த வட்டார மருத்துவ அலுவலர்கள்¸ வட்டாட்சியர்கள்¸ வட்டார வளர்ச்சி அலுவலர்கள்¸ பேரூராட்சி செயல் அலுவலர்கள்¸ ஊராட்சி செயல் அலுவலர்கள்¸ கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த தொடர்ச்சியான கோவிட்-19 வைரஸ் நோய் தொற்று தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்¸ பா.முருகேஷ் பாராட்டினார்.
மேலும் தமது வாழ்த்துக்களை செங்கம் மருத்துவ வட்டார அனைத்து நிலை அலுவலர்களுக்கும் தெரிவித்து மென்மேலும் தடுப்பூசிகள் செலுத்தும் பணியினை விரைவாக அதிகப்படுத்திடவும் அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திருவண்ணாமலை¸ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை¸ திட்ட இயக்குநருமான எம்.பிரதாப்¸ ஊராட்சி உதவி இயக்குநர் லட்சுமி நரசிம்மன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.