Homeசெய்திகள்திருவண்ணாமலையில் டாடா தனிஷ்க்கின் நகை ஷோரூம்

திருவண்ணாமலையில் டாடா தனிஷ்க்கின் நகை ஷோரூம்

திருவண்ணாமலையில் புகழ் பெற்ற டாடா கம்பெனியான தனிஷ்க்கின் 46வது கிளை துவக்கப்பட்டது.

திருவண்ணாமலை திருவூடல் தெருவில் டாடா குழுமத்தின் தனிஷ்க் நகை கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. டைட்டன் கம்பெனியின் ஒருங்கிணைந்த சில்லறை சேவைகள் குழுவின் தலைவர் ஏ.பழனிகுமார் தனிஷ்க் ஜூவல்லரியின் 46வது கிளையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

முன்னாள் எம்.பி வேணுகோபால், முன்னாள் நகரமன்றத் தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் குத்து விளக்கேற்றினர். விழாவில் டாடா நிறுவனத்தின் வணிக வளர்ச்சி மேலாளர்கள் எஸ்.ராஜா, ஜெகன், கோவிந்தராஜன் மற்றும் துளசிநாதன், ரூபன்குமார் உள்பட முக்கிய பிரமுகர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலையில் டாடா தனிஷ்க்கின் நகை ஷோரூம்

பிறகு செய்தியாளர்களிடம் டைட்டன் கம்பெனி குழு தலைவர் ஏ.பழனிகுமார் கூறியதாவது,

தனிச்சிறப்பு மிக்க ஒரே நிறுவனம்

டாடா குழுமத்தைச் சேர்ந்த, இந்தியாவின் மாபெரும் சில்லறை நகை விற்பனை பிராண்ட் ஆக முன்னிலை வகிக்கும் தனிஷ்க், வாடிக்கையாளர்களின் வசதிக்காக தனது விற்பனையகங்களை அதிகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலையில் 46வது கிளை துவக்கப்பட்டுள்ளது.

220 க்கும் மேற்பட்ட நகரங்களில் 385 சில்லறை விற்பனை நிலையங்கள் தனிஷ்கிற்கு உள்ளன. இந்தியப் பெண்களின் நகைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு அவர்களது விருப்பத்துக்கு ஏற்றார் போல் பாரம்பரிய மற்றும் தற்கால நடைமுறைகளுக்கு ஏற்றவாறு நகைகளை வடிவமைத்து விற்பனை செய்யும் தனிச்சிறப்பு மிக்க ஒரே நகை நிறுவனம் தனிஷ்க் ஆகும்.

See also  ஊழல் பி.டி.ஓக்கள் - மாவட்ட நிர்வாகத்திற்கு பா.ஜ.க எச்சரிக்கை

3,600 சதுர அடியில் மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை கிளையில் திறப்பு விழா சலுகையாக 10 கிராம் நகை வாங்குபவர்களுக்கு ஒரு தங்க நாணயம் 14ந் தேதி வரை வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலையில் டாடா தனிஷ்க்கின் நகை ஷோரூம்
சோழா கலெக்ஷன்

சோழ பாரம்பரியத்தை குறிப்பிடும் நகைகள்

இங்கு புதிய வடிவமைப்புகளிலான தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை செய்யப்படுகிறது. பெரும் வரவேற்பை பெற்ற சோழ பாரம்பரியத்தின் கதைகள், அடையாளங்கள் குறிப்பிடும் வகையான ‘சோழா’ கலெக்ஷன் மற்றும் இந்திய கலை வடிவங்களில் இருந்து ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட அலெக்யா கலெக்ஷனும் இங்கு கிடைப்பது சிறப்பம்சமாகும்.

வாடிக்கையாளர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில், திருவண்ணாமலை கிளையில் 5,000-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில் நகைகள் உள்ளன. மிகத் தூய்மையான நகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக தனிஷ்க் விற்பனையகங்களில் அதிநவீன காரட் மீட்டர்கள் உள்ளன. அவற்றில் வாடிக்கையாளர்கள் திறம்பட நகைகளின் தூய்மைத் தன்மை குறித்து பரிசோதித்து அறிந்து கொள்ளலாம்.

டாடா குழுமத்தின் ஒரு அங்கமான தனிஷ்க், நல்ல வடிவமைப்பு, சிறப்பு மிக்க டிசைன்கள், உயர்ந்த மற்றும் உத்தரவாதமுள்ள தரம் ஆகியவற்றுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நற்பெயர் பெற்றுத் திகழ்ந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சிகரெட், மதுபான தயாரிப்பில் இறங்காதது ஏன்?

மேலும் அவர் தெரிவித்த தகவல்கள்

• சால்ட் (உப்பு) முதல் சாட்டிலைட் வரை டாடா நிறுவனம் கால்பதித்துள்ளது.

See also  காவு வாங்கும் கல்குவாரி-அடுத்தடுத்து உயிர்பலி

• சிகரெட், மதுபானம் என பொதுமக்களுக்கு பாதிப்பை தரும் தயாரிப்புகளில் இறங்காத உலகிலேயே மிகப்பெரிய நிறுவனம்.

• சுங்க வரி, ஜிஎஸ்டி வரிகளை நியாயமாகவும், நேர்மையாகவும் செலுத்துகிற நிறுவனம்

• ஒசூரில் உள்ள சொந்த தொழிற்சாலையில் நகைகள் சுத்தமான 24 கேரட்டாக மாற்றி தயாரிக்கப்படுகிறது.

• 24 கேரட் என்பது 99.5 தங்கம், 91.6 சதவீதம் அதாவது 916 என்பது 22 கேரட்டாகும். எனவே கலப்பிடமில்லாத நகை என்பதாலேயே தனிஷ்க்கில் நகை சிறிது விலை அதிகம்.

• தஞ்சாவூர் போன்று திருவண்ணாமலை கோயிலை மையப்படுத்தி நகை மாடல்கள் செய்ய ஆலோசிக்கப்படும்.

• எங்கள் தயாரிப்பு நகைகளுக்கு மற்ற கடைகளில் மதிப்பு அதிகம். வங்கிகளில் கிராமுக்கு கூடுதல் பணம் கிடைக்கும்.

• சிறந்த நகை சேமிப்பு திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு டைட்டன் கம்பெனி குழு தலைவர் ஏ.பழனிகுமார் தெரிவித்தார்.

மாடவீதியில் நகை கடை

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் முன்னணி நிறுவனங்கள் தங்களது ஷோரூமை ஆரம்பிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக எப்போதுமே கூட்டம் நிறைந்து காணப்படும் மாடவீதியில் இடம் தேடி வருகின்றனர்.

மாடவீதி மவுசு என்பதால் கொசமடத் தெருவில் இருந்த கல்யாண் ஜூவல்லர்ஸ், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் வரிசையில் திருவூடல் தெருவுக்கு மாற்றப்பட்டு விட்டது. வியாபாரம் டல்லானதால் மத்திய பஸ் நிலையம் செல்லும் வழியில் இருந்த பிரபல நகைக்கடையான ஜோயாலுக்காஸ் மூடப்பட்டு விட்டது. பல வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் ஷோரூமை துவக்க இருந்த லலிதா ஜூவல்லர்ஸ் அந்த முயற்சியை கைவிட்டு விட்டது.

See also  பென்ஷனே வரலைங்க-மசூதிக்கு வந்த செஞ்சி மஸ்தானிடம் புகார்

ஆனால் மக்களிடத்தில் டாடா நிறுவனத்திடம் உள்ள மதிப்பின் காரணமாக அந்நிறுவனம் திருவண்ணாமலையில் தைரியமாக கால்பதித்துள்ளது.

திருவண்ணாமலையில் டாடா தனிஷ்க்கின் நகை ஷோரூம்
காரட் மீட்டர்

தமிழர்கள் மீது தனி மரியாதை

மாடவீதியான திருவூடல் தெருவில் வன்னியர் மடம் எதிரில் அமைந்துள்ள டாடா கம்பெனியின் தனிஷ்க் ஷோரூமில் வாங்கும் நகையை மட்டுமன்றி மற்ற கடைகளில் வாங்கும் நகையின் தரத்தையும் காரட் மீட்டரில் இலவசமாக பரிசோதித்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் திறப்பு விழா முதல் நாளிலேயே நகை சேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் சேர்ந்தனர்.

சமூகத்தின் மீதும், தனது ஊழியர்களிடத்திலும் அக்கறை கொண்டதாக விளங்கி வரும் டாடா நிறுவனம், இந்தியா பேரிடர்களை சந்தித்த போதெல்லாம் நிதி உதவிகளை அளித்து சமூக கடமைகளை ஆற்ற தவறுவதில்லை. உதாரணமாக கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக ரூ.1500 கோடியை வழங்கி அனைவரது பாராட்டுதலையும் பெற்றது.

தமிழர்கள் மீது தனி மரியாதை கொண்ட டாடா நிறுவனம், கொரோனா பரிசோதனைக்காக ரூ.8 கோடி மதிப்பிலான கருவிகளை பிசிஆர் கருவிகளை தமிழக அரசிடம் வழங்கியதும், 2017ம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!