Homeஅரசு அறிவிப்புகள்திருவண்ணாமலை:பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு

திருவண்ணாமலை:பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு

திருவண்ணாமலை:பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் செப்டம்பர் 1முதல் பள்ளிகள் திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலவலக கூட்டரங்கில்¸ பொது சுகாதரம் மற்றும் நோய் தடுப்பு துறை வெளியிட்டுள்ள¸ கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி¸ வருகின்ற 1.09.2021 அன்று முதல் 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரசு பள்ளிகள்¸ அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் திறப்பது குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் தலைமையில் இன்று (21.08.2021) நடைபெற்றது.

பள்ளிகள் திறக்கப்படும் போது பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன. அனைத்து ஆசிரியர்களும்¸ கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதை உறுதி செய்தல்¸ உள்ளுர் நிர்வாகத்துடன் இணைந்து பள்ளி வளாகத்தினை தூய்மைப்படுத்துதல்¸ மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரும் போது முறையான கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடைமுறையினை உறுதி செய்தல்¸ சுகாதாரத்துறை மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை முழுமையாக பரிசோதனை செய்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. 

நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாணவர்களுக்கு இடையே 6 அடி சமூக இடைவெளி இருக்கும் வகையில் இருக்கை வசதிகளை ஏற்படுத்துதல்¸ அதற்கேற்ற வகையில் கால அட்டவணையை தயாரித்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு நடவடிக்கையினை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும்¸ மாணவர்கள்¸ பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கோவிட்-19 முன்னெச்சரிக்கை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது¸  

செப்டம்பர் மாதம் முதல் 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. துறை அதிகாரிகளிடம் கொரோனா தொற்று பாதிப்பில்லாமல்¸ பள்ளி¸ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி வருவது முதல் வீட்டிற்கு செல்லும் வரை மாணவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் 100சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது. மேலும்¸ தடுப்பூசி செலுத்தி கொண்ட ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளி கல்வித்துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பப்படும்.  

திருவண்ணாமலை:பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு

தமிழக அரசு தெரிவித்த¸ கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பள்ளிகளின் மீது புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் (Toll Free Number) ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதிகளில் மாணவர்களை வெளியில் அனுப்பாமலும்¸ பள்ளி முடிந்தவுடன் விடுதிக்கு வருமாறும் அறிவுரை வழங்க வேண்டும். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 1600 பள்ளிகள் உள்ளன. இதில் 545 உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மொத்த  மாணவர்கள் 1¸27¸741 உள்ளன. இதில் ஒரு நாளைக்கு 50சதவீதம்  மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரவேண்டும். பள்ளி மாணவர்கள் மட்டும் பள்ளி சென்று வர சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொரோனா வைரஸ் நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட (Containment Zone) பகுதியிலிருந்து ஆசிரியர்கள்¸ மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரக்கூடாது தமிழக அரசின் கொரோன வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் தெரிவித்தார். 

இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி¸ மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துக்குமரசாமி¸ மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.பூபதி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

See also  அக்னி வீர் திட்டத்தில் ராணுவத்தில் சேரலாம்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!