Homeசெய்திகள்கலெக்டர் கேட்டதால் கடையடைப்பு- வியாபாரிகள் சங்கம்

கலெக்டர் கேட்டதால் கடையடைப்பு- வியாபாரிகள் சங்கம்

கலெக்டர் கேட்டதால் கடையடைப்பு- வியாபாரிகள் சங்கம்

திருவண்ணாமலையில் கலெக்டர் கேட்டு கொண்டதற்கு இணங்க மாலை 5 மணிக்கு மேல் கடைகளை அடைக்க முடிவு எடுத்திருப்பதாக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் இது சம்மந்தமாக அரசு தரப்பிலிருந்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. 

தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2 அலையில் விலை மதிப்பற்ற பலரது உயிர்கள் பறிபோய் விட்டது. 3 அலை இதைவிட மோசமாக இருக்கம் என கணிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் அதிக அளவில் பாதிப்படுவார்கள் என சொல்லப்பபடுகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இன்று (14-08-2021) 1916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 122 சிறார்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இவர்கள் 12 வயதிற்கு உட்பட்டவர்கள். இது மற்ற நாட்களை விட அதிகம் ஆகும். திருவண்ணாமலையில் 41 பேருக்கு இன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுத்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை நகரில் பல்வேறு கடைகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர்¸ திடீர் என சோதனை நடத்தி வருகிறார்கள். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததாலும்¸ கொரோனா தொற்று பரவல் தடுப்பு விதிமுறைகளை சரிவர பின்பற்றாதாலும் பிரபல செல்போன் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. அதே போல் கல்யாண் ஜூவல்லர்ஸ்சிலும் சோதனை நடத்தப்பட்டு கடை நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்நிலையில் திருவண்ணாமலைக்கு சமீபத்தில் வந்திருந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜரா¸ செய்யாறில் தினமும் 5 கடைகளுக்கு கட்டாயம் சீல் வைக்க வேண்டுமென்று ஆட்சியர் உத்தரவு பிறப்பித்ததாக அதிகாரிகள் வியாபாரிகளை அச்சுறுத்தி கடைகளுக்கு சீல் வைத்து இருக்கிறார்கள். இது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். எனவே இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரியின்மீது ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சீல்வைக்கும் கலாச்சாரமே இருக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இதைத் தொடர்ந்து கடைகளுக்கு சீல் வைப்பது என்பது நடைபெறவில்லை. அதிகாரிகளின் சோதனையில் கடைகளில் கூட்டம் அதிகரித்து வருவது குறித்து கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில்¸ மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்¸ திருவண்ணாமலை தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசினார். 

கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் 16-08-2021 திங்கட்கிழமை முதல் மாலை 5 மணிக்கு மேல் வணிக நிறுவனங்களை மூட முடிவு எடுத்திருப்பதாக தெரிவித்தார். இது சம்மந்தமாக நம்மிடம் பேசிய திருவண்ணாமலை தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் டி.எம்.சண்முகம் கலெக்டர் கேட்டு கொண்டதற்கு இணங்க 16ந் தேதி முதல் மாலை 5 மணிக்கு மேல் கடைகளை மூடுவதென்ற முடிவை எடுத்திருப்பதாகவும்¸ இது சம்மந்தமாக திருவண்ணாமலை பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கு சுற்றரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

ஆனால் இன்று இரவு வரை இது சம்மந்தமாக அரசு தரப்பிலிருந்து  எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும்¸ இதன் பின்னரும் கூட்டத்தை அதிகமாக சேர்க்கும் நிறுவனங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. 

See also  திருவண்ணாமலை: குரூப் 4 தேர்வில் 9727 பேர் ஆப்சென்ட்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!