Homeசெய்திகள்தலைவர் சிறைக்கு போய் விடுவார்- அதிகாரி டென்ஷன்

தலைவர் சிறைக்கு போய் விடுவார்- அதிகாரி டென்ஷன்

தலைவர் சிறைக்கு போய் விடுவார்- அதிகாரி டென்ஷன்

ஊராட்சி மன்றத் தலைவர் சிறைக்கு சென்று விடுவார் என அதிகாரி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம் ஊர்கவுண்டனூர் ஊராட்சி மன்றத் தலைவராக கோவிந்தராஜி என்பவரும்¸ துணைத் தலைவராக ஏழுமலையும்¸ வார்டு உறுப்பினர்களாக இந்திராணி¸ பரசுராமன்¸ ஜெயலட்சுமி¸ மோகனா¸ கிருஷ்ணன் ஆகியோரும் உள்ளனர்.

இந்நிலையில் துணைத் தலைவர் மற்றும் 5 உறுப்பினர்களும் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இது சம்மந்தமாக அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்சை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது¸

ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜி¸ ஊராட்சி மன்ற கூட்டத்தை நடத்தாமல்¸ ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்பட்ட செலவினம் பற்றிய எந்த ஒரு விளக்கமும் தெரிவிக்காலும் கூட்டம் நடந்த மாதிரி உறுப்பினர்களின் வீட்டிற்கு சென்று கையெழுத்து பெற்றுக் கொள்வார். ஊராட்சி மன்ற துணைதலைவர் கையொப்பத்தை தானே இட்டு ஊராட்சி நிதியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளார். இவரது முறைகேடுகளால் ஊராட்சியில் அத்தியாவசிய குடிநீர் பணிகள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. ஜல்ஜீவன் மிஷன்; திட்டத்தில் தரமான பைப்புகளை பதிக்காமல் மிகவும் தரம் குறைந்த பைபுகளை பதித்து உள்ளார். மகள் பெயரில் நூறு நாள் வேலை அடையாள அட்டையை பதிவு செய்து பணி செய்தது போல் பணம் பெற்று உள்ளார்.

கோவிந்தராஜி¸ மனைவி தங்கராணி¸ பண்டிரேவ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்ட அமைப்பாளராக உள்ளார் இவரது நிலத்தில் பழைய திறந்தவெளி கிணறு ஒன்றும் அதில் தாட்கோ திட்டம் மூலம் இலவச விவசாய பம்பு செட் மின் இணைப்பும் உள்ளது. இதை திட்டமிட்டு மறைத்து தனக்குள்ள பதவி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ரூ.7.48 லட்சம் மதிப்பீட்டில் தனி நபர் கிணறுக்கான நிர்வாக அனுமதி பெற்று புதிய கிணறு தோண்டாமலேயே பழைய கிணற்றை காண்பித்து பணம் பெற்று உள்ளார்.

தலைவர் பதவி என்கிற அதிகாரத்தை பயன்படுத்தி அரசு விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்டு அரசுக்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு வகையில் நிதியிழப்பு மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு உள்ளார். இவைகளை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளோம்.

எனவே ஊர்கவுண்டனூர் ஊராட்சி மன்றத் தலைவராக கோவிந்தராஜி மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் படி ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்து நிதி முறைகேடுகளுக்காக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைவர் சிறைக்கு போய் விடுவார்- அதிகாரி டென்ஷன்

இதையடுத்து இன்று (11-08-2021) திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் லட்சுமி நாராயணன் விசாரணை நடத்த ஊர்கவுண்டனூர் சென்றார். அங்கு ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்¸ வார்டு உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணை முடிந்து வெளியே வந்த உதவி இயக்குநர் லட்சுமி நாராயணனை கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு ஊராட்சி மன்றத் தலைவர் மீது சரமாறியாக குற்றம் சாட்டினர். 100 நாள் வேலை வழங்க  பணம் கேட்பதாகவும்¸ பசுமை வீடு வழங்காமல் இருப்பதாகவும் கூறினர். கேள்வி கேட்பவர்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை துண்டித்து விடுவதாகவும்¸ இதனால் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் கூறியதால் டென்ஷனான உதவி இயக்குநர் இப்படி செய்தால் அவர்(ஊராட்சி மன்ற தலைவர்)¸ உள்ளே(சிறைக்கு) சென்று விடுவார் என்றார். 

பிறகு இந்த ஊராட்சியில் குறைகள் அதிகம் இருப்பதால் சிறப்பு முகாம் நடத்தி குறைகளை களையவும்¸ அறிக்கை அளிக்கும்படியும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதில் திருப்தி அடையாத கிராம மக்கள் தலைவர் பதவியிலிருந்து கோவிந்தாராஜியை உடனடியாக நீக்கும்படி வலியுறுத்தினர். பிறகு விசாரணை முடிந்து புறப்பட்ட உதவி இயக்குநர் லட்சுமி நாராயணனின் ஜீப்பை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

தலைவர் சிறைக்கு போய் விடுவார்- அதிகாரி டென்ஷன்

இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் கிராம மக்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடத்தப்பட்ட விசாரணை தங்களுக்கு திருப்தி இல்லை என்றும்¸ அதிகாரிகள் தலைவருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டிய கிராம மக்கள் ஊராட்சி மன்றத் தலைவரை நீக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றனர். 

See also  விஜிலென்ஸ் போலீஸ் விசாரணையில் பெண் பி.டி.ஓ

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!