Homeஅரசு அறிவிப்புகள்திருவண்ணாமலை கோயிலில் பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை கோயிலில் பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை கோயிலில் பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 10 மற்றும் 11ந் தேதி 2நாட்கள் நடைசாத்தப்படும் எனவும்¸ தீ மிதி விழா ரத்து செய்யப்படும் எனவும் கலெக்டர் அறிவித்துள்ளார். 

தை மாதம் பொங்கல் வரை திருவிழாக்களை துவக்கி வைக்கிற மாதமாக விளங்குகிற ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பூரம் அம்பிகையின் அவதாரமான உமாதேவியின் அவதார நாளாகும். இதையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பூர விழா கடந்த 1ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் 5ம் பிரகாரத்தில் சாமி ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. 

வழக்கமாக 10வது நாள் அம்மனுக்கு வளைகாப்பும்¸ நள்ளிரவு உண்ணாமலையம்மன் சன்னதி எதிரில் தீ மிதி விழாவும் நடைபெறும். 

இந்நிலையில் அண்ணாமலையார் கோயிலில் இன்று 9ந் தேதி 9வது நாள் விழா நடைபெற்றது. நிறைவு நாள் விழா நாளை 10ந் தேதி நடக்கிறது. இந்நிலையில் நாளை நடக்கும் தீ மிதி விழா ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை கோயிலில் பக்தர்களுக்கு தடை

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸ 

கோவிட்-19 வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில்¸ ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பூரம் ஆகிய விழாக்களுக்கு சேவார்த்திகள் கூடுதலாக வருகை புரிவார்கள் என்பதால்¸ மேற்படி இரண்டு நாட்களில் திருக்கோயிலில் நடைசாற்றப்பட வேண்டுமென அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆடிப்பூரம் விழா இத்திருக்கோயிலில் 01.08.2021 அன்று துவங்கி¸ அனைத்து விழாக்களும் திருக்கோயில் வளாகத்திற்குள்ளேயே சேவார்த்திகள் யாரையும் அனுமதிக்காமல் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 10.08.2021 அன்று காலை 11.00 மணியளவில் ஆடிப்பூரம் விழா துவங்கி¸ அன்று மாலை தீமிதி விழா நடைபெறுவதையும் கூட ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுநாள் 11.08.2021 அன்று ஆடிப்பூரம் விழாவின் தொடர் நிகழ்வுகள் நடைபெறும்.

திருவண்ணாமலை கோயிலில் பக்தர்களுக்கு தடை

எனவே¸ 11.08.2021 அன்று இத்திருக்கோயில் நடை சாற்றப்பட அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் 10.08.2021 அன்றும் இத்திருக்கோயிலுக்கு அதிக அளவிலான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால்¸ 10.08.2021 மற்றும் 11.08.2021 ஆகிய இரண்டு நாட்களுக்கு இத்திருக்கோயில் நடைசாற்றப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

வேறு எந்த சிவன் கோயிலிலும் ஆடிப்பூரத்தன்று தீ மிதி விழா நடைபெறாத நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடக்கும் தீ மிதி விழா பிரசித்தி பெற்றதாக விளங்கி வருகிறது. எனவே தீ மிதி விழாவையும்¸ அம்மனுக்கு நடைபெறும் வளைகாப்பையும் காண ஆவலாக இருந்த பக்தர்களுக்கு அரசின் அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

See also  பர்வதமலை ஏற தடை-கலெக்டர் அறிவிப்பு

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!