போக்சோ சட்டத்தில் ஜவுளிகடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கடைக்கு வந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் போலீசார் நடவடிக்கை
திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் அருகே உள்ள ஆவூர் கிராமத்தில் சீமாட்டி என்ற பெயரில் துணி, செருப்பு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வரும் கடையை வைத்து நடத்தி வருபவர் முகமதுயாசிர் அராபத் (வயது30). இவர் வேட்டவலத்தைச் சேர்ந்தவர்.
கடைக்கு சென்ற மாணவி
வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், நேற்று மாலை பள்ளி முடிந்து தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஆவூர் வந்துள்ளார். அப்பொழுது புது செருப்பு எடுப்பதற்காக முகமதுயாசிர் அராபத்தின் கடைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.
பாலியல் தொந்தரவு
புது செருப்பு வாங்கிக் கொண்டிருந்த போது கடையின் உரிமையாளரான முகமது யாசிர் அராபத் அந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் பள்ளி மாணவி வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதையடுத்து வேட்டவலம் போலீஸ் நிலையத்தில் மாணவியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
போஸ்கோ சட்டம்
போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது யாசிர் அராபத்தை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.