முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் புதியதாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் இணையதளத்தில் பதிவு செய்துக்கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,
2022-2023ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 5 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது இத்தகவல்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள http://www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் புதியதாக மட்டைபந்தில் (Cricket) கீழ்கண்டவாறு விளையாட்டு பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளது.
1. பொதுப்பிரிவு (ஆண்கள்/பெண்கள்) 15 வயது முதல் 35 வரை
(மாவட்ட அளவிலான மட்டைபந்து போட்டிகள்)
2. பள்ளி மாணவ/மாணவியர் 12 வயது முதல் 19 வயது வரை
(மாவட்ட அளவிலான மட்டைபந்து போட்டிகள் )
3. கல்லூரி மாணவ/மாணவியர் 15 வயது முதல் 19 வயது வரை
(மாவட்ட அளவிலான மட்டைபந்து போட்டிகள் )
போட்டி முன்பதிவு
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் http://www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். 23.01.2023 வரை பதிவு செய்து கொள்பவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 04175 – 233169 என்ற தொலைபேசி எண்ணிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.