Homeஅரசு அறிவிப்புகள்11409 காலி பணியிடங்கள்- போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

11409 காலி பணியிடங்கள்- போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் மத்திய அரசு துறைகளில் காலியான உள்ள 11409 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகான இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் அடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

11409 பணியிடங்கள்- போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,

பல்வேறு மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள Multi Tasking (Non technical) Staff (10,880), Havildar in CBIC AND CBN (529) ஆகிய 11,409-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு SSC-MTS (Multi Tasking Staff) போட்டித் தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக இளைஞர்கள் மத்திய அரசுப் பணியில் சேர அரிய வாய்ப்பு

பத்தாம் வகுப்பு முடித்த 18 வயது முதல் 27 வயதுக்குட்பட்ட வேலைநாடுநர்கள் இத்தேர்வை தமிழிலும் எழுதலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 17.02.2023 என அறிவிக்கப்பட்டுள்ளது.

SC,ST பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பொது பிரிவினர்களுக்கு 10 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி SC,ST பிரிவினர்களுக்கு 15 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி OBC பிரிவினர்களுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகளும் உண்டு மற்றும் விதவைகளுக்கு 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

See also  வேங்கிக்கால் கடைகளில் அதிரடி சோதனை

இத்தேர்விற்கு பெண்கள், SC,ST பிரிவினர்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் முன்னாள் இராணுவத்தினர்கள் இலவசமாக விண்ணப்பிக்கலாம், மற்றவர்கள் விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் கூடுதல் விவரங்கள் https://ssc.nic.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 01.02.2023 அன்று துவங்கி நடத்தப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை வார நாட்களில், காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். வாரம்தோறும் மாதிரித் தேர்வுகளும், இலவச பாடக் குறிப்புகளும் வழங்கப்படும்.

எனவே, இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!