Homeஅரசு அறிவிப்புகள்வித்தியாசமாக செய்தால்தான் பா.ஜ.க ஜெயிக்கும்

வித்தியாசமாக செய்தால்தான் பா.ஜ.க ஜெயிக்கும்

வித்தியாசமாக செய்தால்தான் பா.ஜ.க ஜெயிக்கும்

வித்தியாசமாக செய்தால் மட்டுமே பாரதிய ஜனதா கட்சியால் ஜெயிக்க முடியும் என திருவண்ணாமலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறினார்.

குருபவுர்ணமி தினத்தில் திருவண்ணாமலையிலிருந்து உறுப்பினர் சேர்க்கையை துவக்கிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இவ்வாறு கூறினார்.  

தமிழக பா.ஜ.க.தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை கடந்த கடந்த 8ந் தேதி நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. தமிழ்நாட்டின் மூலை¸ மூடுக்கெல்லாம் பா.ஜ.கவை கொண்டு செல்வதே எங்கள் இலக்கு என அவர் தெரிவித்திருந்தார். அதன்படி பா.ஜ.கவில் தீவிர உறுப்பினர் சேர்க்கை துவங்கியுள்ளது. பூத்துக்கள் தோறும் இளைஞர்களையும்¸ மகளிர்களையும் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த உறுப்பினர் சேர்க்கையை குரு பவுர்ணமியும்¸ ஆடிவெள்ளியும் சேர்ந்து வந்த நல்ல நாளில் திருவண்ணாமலையிலிருந்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை துவக்கினார். முன்னதாக அவர் ரமணாசிரமத்திலும்¸ அண்ணாமலையார் கோயிலிலும் தரிசனம் செய்து விட்டு திருவண்ணாமலை உண்ணாமலை திருமண மண்டபத்தில் நடந்த உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிக்கு வருகை தந்தார். 

அப்போது அங்கு கூடியிருந்த பா.ஜ.க நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாவது¸

தி.மு.க இந்தியை எதிர்த்து போராடிய போது பல தொண்டர்கள் தீக்குளித்து விட்டார்கள். அதனால்தான் அந்த கட்சி வளர்ந்தது. தீக்குளித்த தொண்டர்களின் புகைப்படத்தை அவர்களது கட்சி அலுவலகத்தில் எங்கேயும் பார்க்க முடியாது. பா.ஜ.க மட்டும்தான் அடிப்படை தொண்டர்களுக்கு மதிப்பளித்து அவர்களே தலைவராக வரும் அளவிற்கு பாதை வகுக்கக் கூடிய கட்சியாகும். 

2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல்¸ மே மாதங்களில் வர உள்ளது. அதற்காக நாம் வேலைகளை துவக்கியுள்ளோம். ஏனென்றால் கடைசி 6 மாதத்தில் செய்கிற எந்த வேலையுமே சரியாக அமையாது. ஒவ்வொரு நாளும் நாம் கட்சியை வளர்த்து இங்கிருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினரை டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்ற குறிக்கோளோடு வேலை செய்ய வேண்டும். அதற்கான வேலையை புண்ணிய பூமியான திருவண்ணாமலையில் இருந்து ஆரம்பித்துள்ளோம். 

வித்தியாசமாக செய்தால்தான் பா.ஜ.க ஜெயிக்கும்

நான் வரும்போது போஸ்டர் அடித்து¸ கொடி கட்டி உற்சாக வரவேற்பு அளித்தீர்கள். தான் சம்பாதிக்கும் காசை வைத்து போஸ்டர் அடித்து¸ கொடிகள் அமைத்து கட்சியை வளர்ப்பவர்கள் பா.ஜ.க தொண்டர்கள்தான். இது யதார்தமான உண்மை. மற்ற கட்சியினர் காண்டிராக்டரில் வரும் பணத்தை கொண்டு செலவு செய்வார்கள். நமது உழைப்பு வீண் போகக் கூடாது. 

திருவண்ணாமலையில் அனைத்து பகுதிகளிலும் இருக்கக் கூடிய மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி தெரிய வேண்டும். அதற்கு ஒவ்வொரு பூத்திலும் ஒரு கொடி கம்பம் இருக்க வேண்டும். பிரதமர் மோடி உருவம் பதித்த போர்டு வைக்கப்பட வேண்டும். அனைத்து கிராமங்களிலும் இதை செய்ய வேண்டும். மக்களுக்கு ஓட்டு பெட்டியில் தாமரை சின்னத்தை அழுத்த நினைக்கும் போது அவர்கள் மனதில் ஏதேதோ ஓட ஆரம்பிக்கும். 60 ஆண்டு காலமாக ஓட்டு போட்டேன்¸ 10 தேர்தல்களில்  ஓட்டு போட்டேன். தாமரைக்கு போடலாமா?¸ வேண்டாமா? என நினைப்பார்கள். புதியதாக ஏதாவது செய்யும் போது ஒரு விதமான பயம் வரும். புதியதாக ஏதாவது செய்யலாமா என நினைக்கும் போது பழையதை நோக்கி சென்று விடுவார்கள். 

எனவே பாரதிய ஜனதா கட்சி ஜெயிக்க வேண்டும் என்றால் எம்.பி¸ எம்.எல்.ஏக்கள் ஜெயிக்க வேண்டும் என்றால் இதுவரை செய்யாத வேலையை நீங்கள் செய்தால் மட்டும்தான் ஜெயிக்க முடியும். இதுவரை செய்த அதே வேலையை செய்வதனால் ஜெயிக்க முடியாது. வித்தியாசமாக செய்ய வேண்டும். வீடுகளை நோக்கி செல்ல வேண்டும்¸ மக்களை நோக்கி செல்ல வேண்டும். அனைத்து கிராமங்களிலும் கொடி கம்பங்களை நட வேண்டும். அதற்கு திட்டமிடுதல் வேண்டும். பாரதிய ஜனதா கட்சியில் பூத் தலைவராக இருப்பதுதான் மிகப்பெரிய பதவியாகும். ஏனென்றால் பூத் இல்லையென்றால் எதுவுமே இல்லை. அமித்ஷா அப்படித்தான் வாழ்க்யை ஆரம்பித்தார். 

இவ்வளவு தியாகம் செய்து ஜெயிக்க முடியவில்லை என்றால் இந்த இயக்கத்திற்கு நாம் சரியான மரியாதையை தரவில்லை என்பது எனது கருத்து. பாரத் மாத்தாகி ஜே என்று சொல்வதை விட பாரத அன்னையின் புகழ் ஓங்குக என சொல்ல வேண்டும். இதற்கான குறிப்பு இன்னும் 20 நாட்களில் உங்களுக்கு வழங்கப்படும். பாரத பிரதமருடைய அனைத்து திட்டங்களையும் தமிழில் மொழி பெயர்த்து தமிழில் ஒரு பெயர் வைத்து உங்களிடம் கொடுத்து விடுகிறோம். 

வித்தியாசமாக செய்தால்தான் பா.ஜ.க ஜெயிக்கும்

இதனால் கிராமங்களில் பாரதிய ஜனதா கட்சியின் போர்டை வைக்கும் போது கட்சியை சாராதவர்கள் இதை பார்ப்பார்கள். நாம் நமக்குள்ளே கோஷம் போட்டுக் கொண்டு¸ நமக்குள்ளே ஓட்டு போட்டுக் கொண்டு இருந்தால் ஜெயிக்க முடியாது. “கட்சிக்கு உழைப்பை அளிக்கிறேன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்¸ கட்சி அதனுடைய உழைப்பை என் மீது போடும் ” என்பதே நாம் அனைவரும் காலையில் எழுந்ததும் சொல்கிற மந்திரமாகும். தினமும் உங்களுடைய வேலையை எதிர்பார்ப்பின்றி செய்யுங்கள். கட்சிலிருந்து ஒதுங்கியவர்களையும் கட்சிக்குள் அழைத்து வாருங்கள். 

ஆகஸ்டு 1ம் தேதி “ஒவ்வொரு இல்லம் செல்வோம்¸ உள்ளத்தை வெல்வோம்” என்ற திட்டத்தின்படி ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மக்களை பார்த்து பேச வேண்டும். வீட்டிற்கு சென்றாலே பாதி பிரச்சனை முடிந்து விடும். 

இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஆர்.ஜீவானந்தம்¸ கோட்ட அமைப்பு செயலாளர்கள் வி.ரமேஷ்¸ எஸ்.குணசேகரன்¸ மாவட்ட பார்வையாளர் வி.அருள்¸ மாவட்ட பொதுச் செயலாளர் எம்.சதீஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

அதன்பிறகு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை¸ திருவண்ணாமலை போளுர் ரோட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பா.ஜ.க நகர செயலாளர் சுரேஷ்பாபுவின்(வயது 48) வீட்டிற்கு சென்று அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர் சுரேஷ்பாபுவின் குடும்ப வாழ்வாதாரத்துக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்றார். சுரேஷ்பாபுவின் மகள் சௌபர்ணிகாவின் ஐ.ஏ.எஸ் கோச்சிங்கிற்கு தேவையான புத்தகங்கள் வழங்கப்படும் எனவும்¸ மகன் மகேந்திரனுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க உதவிகள் செய்யப்படும் என்றும் அண்ணாமலை உறுதி அளித்தார். 

வித்தியாசமாக செய்தால்தான் பா.ஜ.க ஜெயிக்கும்

See also  கல்வி கடன் பெற மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!