Homeசெய்திகள்ஒரே ஏரியாவிலிருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள்

ஒரே ஏரியாவிலிருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள்

2021ம் ஆண்டில் ஏடிஎம் மோசடியை செய்தவர்களும், கேஸ் வெல்டிங்கால் ஏடிஎம்மை உடைத்து பணத்தை கொள்ளையடித்தவர்களும் ஒரே ஏரியாவிலிருந்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரூ.72 லட்சம் கொள்ளை

திருவண்ணாமலையில் தேனிமலை, மாரியம்மன் கோயில் தெரு ஆகியவற்றில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம், கலசப்பாக்கத்தில் ஒன் இண்டியா ஏடிஎம், போளுரில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் ஆகியற்றில் கேஸ் வெல்டிங் மிஷினை பயன்படுத்தி உடைத்து அதில் இருந்த ரூ.72 லட்சத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்துக் கொண்டு தப்பி விட்டது. இது தமிழ்நாடு அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரே ஏரியாவிலிருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள்

ஒரே ஏரியாவிலிருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள்

கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் 10 பேர், 2 கார்களில் வந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. தச்சம்பட்டு பகுதியில் காரை திருடிச் சென்றவர்களுக்கும், இந்த கும்பலுக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளதால் கொள்ளையர்கள் கார்களை வடமாநிலத்திலிருந்து கனரக லாரியில் எடுத்து வந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் கேஸ் வெல்டிங் மிஷினால் உடைத்து திருட முடியும் என்பதை நோட்டம் விட்டுதான் கொள்ளை சம்பவத்தில் வடமாநில கும்பல் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

See also  விபத்து-காரை உடைத்து உடல்கள் மீட்பு

ஐஜி கண்ணன் பேட்டி

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இந்த மாதிரியான கொள்ளை நடந்திருப்பது காவல்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் போலீசார் திருவண்ணாமலையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஐஜி கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

ஒரே ஏரியாவிலிருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள்

வெளி மாநில கும்பல்

இரவு 2 மணியிலிருந்து அதிகாலை 4 மணிக்குள் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம்மில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 4 ஏடிஎம்களிலும் 2 மணி நேரத்தில் கொள்ளையை நடத்தி இருக்கின்றனர். ஏடிஎம் பற்றி நன்கு தெரிந்த குற்றவாளிகள்தான் இதில் ஈடுபட்டு இருக்கின்றனர். ஏடிஎம் திருட்டுகளை செய்யக்கூடிய வெளி மாநில கும்பல் இதில் ஈடுபட்டுள்ளது.

இதே போன்று கொள்ளை மகாராஷ்டிராவில் 3ம், மத்திய பிரதேசத்தில் 2ம், ஒடிசா, அசாமில் ஒன்றும் நடந்திருக்கிறது. இந்த கும்பல் இந்த முறையை பயன்படுத்தி கொள்ளையடித்திருப்பது தமிழ்நாட்டில் இதுதான் முதல் முறை.

22 ஏடிஎம் மோசடி

இதற்கு முன்பு இவர்கள் தமிழ்நாட்டில் வேறு மாதிரியான ஏடிஎம் குற்றங்களை செய்திருக்கின்றனர். 2021 ஜூன், ஜூலை மாதங்களில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள், பாண்டிச்சேரிகளில் கிட்டத்தட்ட 22 ஏடிஎம் மோசடிகள் நடந்தது. டெபாசிட் மிஷினில் இந்த மோசடி நடந்தது. ஏடிஎம் மிஷினின் செயல்பாடுகளை தெரிந்தவர்கள் தான் இதை செய்தனர். இந்தியாவிலேயே தமிழ்நாடு போலீஸ் தான் இந்த வழக்குகளை திறம்பட கண்டுபிடித்தனர். அதில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களும், திருவண்ணாமலையில் ஏடிஎம்மில் பணத்தை கொள்ளையடித்தவர்களும் ஒரே ஏரியாவில் இருந்து வந்தவர்கள் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

9 தனிப்படை

இவர்களை கண்டுபிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 எஸ் பிகள் இடம் பெற்றுள்ளனர். வெளி மாநிலங்களில் இவர்கள் முகாமிட்டுள்ளனர். இந்த சம்பவங்களில் எங்களுக்கு தேவையான அளவு தடயங்கள் கிடைத்துள்ளது. அதை வைத்து விரைவில் குற்றவாளிகளை கைது செய்து விடுவோம்.

See also  திருவண்ணாமலை: பஸ்சை ஓட்டிச் சென்றார் பிச்சாண்டி

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் நடைபெறுவதால் போதிய அளவு காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இரவு ரோந்து பணியில் ஈடுபடாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட மாநிலத்திலிருந்து வருபவர்கள் எல்லோரும் இப்படி கிடையாது. இந்த சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளவர்கள் ஒரு திருட்டு கும்பல். இவர்களை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

பாதுகாப்பு குறைபாடு

ஏடிஎம் மிஷின்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து அரசுக்கு தெரிவித்து இருக்கிறோம். ரிசர்வ் வங்கி கூட்டத்தில் இது பற்றி தெரிவிப்போம். சில குறிப்பிட்ட ஏடிஎம் மிஷின்கள் தான் இந்த மாதிரி திருட்டு சம்பவங்களை நிறைவேற்றுகின்றனர். எச்டிஎப்சி வங்கியில் இந்த மாதிரி ஏடிஎம் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!