Homeசெய்திகள்ஏடிஎம் கொள்ளை- விமானத்தில் தப்பியவர்கள் சிக்கினர்

ஏடிஎம் கொள்ளை- விமானத்தில் தப்பியவர்கள் சிக்கினர்

ஏடிஎம் கொள்ளை வழக்கில் விமானம் மூலம் தப்பியவர்கள் பிடிபட்டுள்ளதாக ஜஜி கண்ணன் தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

அப்போது அவர் கூறியதாவது,

தடயங்கள் கிடைத்தது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12ம் தேதி அதிகாலை 4 ஏடிஎம்களில் கொள்ளை நடந்திருக்கிறது. இச்சம்பங்களில் காவல்துறைக்கு தடயங்கள் கிடைத்தது. அந்த தடயங்களை வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

கொள்ளையர்கள் பிடிக்க 3 தனிப்படைகள் வெளி மாநிலங்களில் முகாமிட்டுள்ளனர். ஒரு தனிப்படை திருப்பத்தூர் எஸ்.பி.பாலகிருஷ்ணன் தலைமையில் கர்நாடக மாநிலம் கோலாரிலும், 2வது தனி படை வேலூர் எஸ்.பி ராஜேஷ் கண்ணா தலைமையில் குஜராத் மாநிலம் வடோதரா மாவட்டத்திலும், 3 வது படை திருவண்ணாமலை எஸ்.பி கார்த்திகேயன் தலைமையில் அரியானாவிலும் முகாமிட்டுள்ளனர்.

ஏடிஎம் கொள்ளை- விமானத்தில் தப்பியவர்கள் சிக்கினர்

அரியானா கொள்ளையர்கள்

இந்த ஏடிஎம் கொள்ளையில் அரியானாவைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது உறுதியாக தெரிந்து இருக்கிறது. இதற்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கோலாரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்து திருவண்ணாமலைக்கு வந்து இடங்களை கண்காணித்த பிறகு கொள்ளையில் ஈடுபட்டு இருக்கின்றனர். இது சம்பந்தமாக கோலாரில் 2 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகிறோம்.

See also  எதிர்கட்சிகள் வீடியோ எடுப்பார்கள்-உதயநிதி எச்சரிக்கை

இந்த கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரை குஜராத்தில் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இது மட்டுமின்றி விமானம் மூலம் தப்பித்து அரியானா சென்ற 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். விசாரணைகள் இன்னும் முழுமை அடையவில்லை. விசாரணையில் கொள்ளையர்கள் அனைவரும் அரியானாவில் இருந்து வந்தது தெரிய வந்திருக்கிறது. மொத்தமாக 3 மாநிலங்களும் 10 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களுடைய பெயர், விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

விமானத்தில் தப்பிச் சென்றவர்கள்

கொள்ளையர்கள் திருவண்ணாமலையில் இருந்து கோலாருக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் தப்பி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. அரியானாவில் பதட்டமான ஏரியாவில் கொள்ளையர்களை பிடிக்க அந்த மாநில காவல்துறை உதவி புரிந்தது. தேசிய அளவில் துரிதமாக செயல்பட்டு 2 பேரை தவிர மற்றவர்களை அவர்களது ஊருக்கு தப்பிச் செல்வதற்கு முன் பிடித்துள்ளோம்.

மற்ற மாநிலங்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது பற்றி விசாரித்து வருகிறோம் மற்ற மாநில காவல் துறையும் இது சம்பந்தமாக எங்களிடம் விவரங்களை கேட்டுள்ளது. சில ஏடிஎம்மில் சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல் உள்ளது. அது பற்றி வங்கிகளிடம் பேசியிருக்கிறோம். பாதுகாப்பு குறைவாக உள்ள ஏடிஎம்மில் பாதுகாப்பை அதிகப்படுத்தி இருக்கிறோம். நிறைய ஏடிஎம்கள் காவல்துறையின் சிசிடிவி கேமரா கண்காணிப்பில் இருக்கிறது.

See also  ராஜகோபுரம் பகுதியில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

24 மணி நேரமும் பாதுகாப்பு

கொள்ளை நடந்த அன்று கூட போலீசார் ரோந்து சென்றது சிசிடிவி காட்சிகளில் உள்ளது. அதன் பிறகு தான் கொள்ளை நடந்திருக்கிறது. திருவண்ணாமலை கோயிலுக்கு வெளி மாநில வாகனங்கள் அதிக அளவில் வருவதால் “த்ரீ பிட் த்ரீ ஷிப்ட்”  முறையை அமுல்படுத்த உள்ளோம். முக்கியமான ஒரு போலீஸ் ஸ்டேஷனை 3 பகுதியாக பிரித்து அந்த 3 பகுதிகளிலும் 24 பணி நேரமும் போலீசார் பணியில் இருப்பார்கள். காவல்துறையின் இ-பீட் செயலி மூலம் இதை ஆய்வு செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!