Homeசெய்திகள்ஏடிஎம் கொள்ளையர்கள் படத்தை வெளியிட்டது போலீஸ்

ஏடிஎம் கொள்ளையர்கள் படத்தை வெளியிட்டது போலீஸ்

திருவண்ணாமலை ஏடிஎம்மில் கொள்ளையடித்தவர்களின் 2 பேர் புகைப்படங்களை வெளியிட்டுள்ள போலீசார் அவர்களை கைது செய்து திருவண்ணாமலைக்கு அழைத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,

கடந்த 12.02.2023-ந் தேதி அதிகாலை திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் கேஸ் கட்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ. 72 லட்சத்து 79 ஆயிரத்தை திருடர்கள் கொள்ளையடித்தனர்.

தகவலறிந்தவுடன் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் டாக்டர் என். கண்ணன், மேற்பார்வையில், வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் டாக்டர் எம்.எஸ்.முத்துசாமி தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தீவிர விசாரணையில் இச்சம்பவத்தில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இக்கொள்ளையில் 6 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டதும், இவர்கள் கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் தங்கியிருந்து குற்றம் நடந்த பகுதிகளை ஏற்கனவே நோட்டமிட்டு அதன் பின்பு கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. செபாஸ்கல்யாண் ஆந்திர மாநிலத்திற்கும், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராஜேஷ்கண்ணன் குஜராத் மாநிலத்திற்கும், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே.கார்த்திகேயன் ஹரியானா மாநிலத்திற்கும், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே.எஸ்.பாலகிருஷ்ணன் கர்நாடகா மாநிலத்திற்கும் தங்களது தனிப்படைகளுடன் விரைந்தனர். இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.வி. கிரண்ஸ்ருதியிடம் தடய அறிவியல் சம்மந்தப்பட்ட புலன் விசாரணை ஒப்படைக்கப்பட்டது.

See also  திருவண்ணாமலையில் 2வது நாளும் பலத்த மழை

தீவிர தேடுதல் வேட்டையின் காரணமாக அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் கீழ்கண்ட குற்றவாளிகள் ஹரியானா மாநிலத்தில் செய்யப்பட்டனர். மேற்படி குற்றவாளிகள் திருடிச்சென்ற பணத்திலிருந்து ரூ.3 லட்சத்தையும், குற்றவாளிகள் பயன்படுத்திய வாகனத்தையும் கைப்பற்றி குற்றவாளிகளுடன் தனிப்படையினர் டெல்லியிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்துகொண்டிருக்கின்றனர்.

பிற குற்றவாளிகளையும் கைது செய்ய பல்வேறு பகுதிகளில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கைது செய்யப்பட்டவர்கள்:-

ஏடிஎம் கொள்ளையர்கள் படத்தை வெளியிட்டது போலீஸ்
முகமது ஆரிப்

முகமது ஆரிப் (வயது 35), சோனாரி கிராமம், நூ மாவட்டம், ஹரியானா மாநிலம்.

ஏடிஎம் கொள்ளையர்கள் படத்தை வெளியிட்டது போலீஸ்
ஆஜாத்

ஆஜாத் (37), பைமாகேரா கிராமம், புன்ஹானா மாவட்டம், ஹரியானா மாநிலம்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!