Homeசெய்திகள்ரகளை செய்த வெளிநாட்டவரை கட்டிப் போட்ட மக்கள்

ரகளை செய்த வெளிநாட்டவரை கட்டிப் போட்ட மக்கள்

திருவண்ணாமலையில் ரகளை செய்த வெளிநாட்டவரை பொதுமக்கள் கட்டிப் போட்டனர்.

ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு வெளியூர் மக்கள் மட்டுமன்றி வெளிநாட்டினரும் அதிக அளவில் வருகின்றனர். வெளிநாட்டிவர் தங்குவதற்கென்றே ரமணாசிரமம், விசிறி சாமியார் ஆசிரமம். பெரும்பாக்கம் ரோடு, கோட்டாங்கல் போன்ற பகுதிகளில் ஏராளமான தங்கும் விடுதிகள் தனியார்களால் நடத்தப்படுகிறது.

ரகளை செய்த வெளிநாட்டவரை கட்டிப் போட்ட மக்கள்
சத்சங்கம்

திருவண்ணாமலைக்கு வரும் வெளிநாட்டவர் ஆசிரமங்களுக்கும், அண்ணாமலையார் கோயிலுக்கும் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் தியானங்களிலும், யோகா பயிற்சியிலும், சத்சங்கங்களிலும் பங்கேற்கின்றனர். இது தவிர கிரிவலமும் செல்கின்றனர்.

திருவண்ணாமலைக்கு ஜனவரி மாதம் முதல் வெளிநாட்டவர் வருகை அதிகம் காணப்படும். இவர்களுக்கென உணவகங்கள், ஆடையகங்கள் கொண்ட ஒரு ஏரியாவே உண்டு.

திடீர் ரகளை

இந்நிலையில் இன்று காலை வெளிநாட்டவர் ஒருவர் அரசு கலைக்கல்லூரி அருகில் திடீரென ரகளையில் ஈடுபட்டார். பூ எடுத்துக் கொண்டு வந்த ஒருவரை மறித்து தாக்கினார். சிறுவன் ஒருவனையும் அடித்தார். இளைஞர் ஒருவரிடமிருந்த செல்போனை வாங்கி கீழே போட்டு காலால் மிதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை பிடிக்க முயன்றனர். ஆனால் எல்லோரையும் அவர் அடிக்க முயன்றார். பிறகு ஒரு வழியாக பொதுமக்கள் மடக்கி கையை கட்டி போட்டு ரோடு ஓரம் உட்கார வைத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

See also  தி.மலை பஜாரில் இனி ஒரு புறம் மட்டுமே பார்க்கிங்

ரகளை செய்த வெளிநாட்டவரை கட்டிப் போட்ட மக்கள்

ரகளை செய்த வெளிநாட்டவரை கட்டிப் போட்ட மக்கள்

மனநிலை பாதித்தவரா?

போலீசார் அங்கு வந்து விசாரித்த போது அவர் சரியான பதில் அளிக்கவில்லை. அப்போது வீடியோ எடுத்தவர்களை வீடியோ எடுக்காதீர்கள் என ஆங்கிலத்தில் அந்த நபர் கேட்டுக் கொண்டார். உடம்பில் ரத்தகாயங்கள் இருந்ததால் அவர் ரத்த காயங்களுடன் தென்பட்டதால் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது.

போதை காரணமாக அவர் ரகளையில் ஈடுபட்டதாக முதலில் கூறப்பட்டது. பிறகு அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. அந்த நபரின் பெயர், விவரம் உடனடியாக தெரியவில்லை. பெரும்பாக்கம் ரோட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அவர் தங்கியிருப்பதாக சிலர் தெரிவித்தனர். இது சம்மந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தினால் அரசு கலைக்கல்லூரி அருகில் பரபரப்பு நிலவியது. வேடிக்கை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களை போலீசார் கலைந்து போகச் செய்தனர்.

ரகளை செய்த வெளிநாட்டவரை கட்டிப் போட்ட மக்கள்

இதற்கிடையில் மருத்துவமனையில் அந்த நபர் சேர்க்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவருக்கு உதவிடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!