Homeஅரசு அறிவிப்புகள்பழனி கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பழனி கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது சம்மந்தமாக அக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர் க.சந்திரமோகன், இணை ஆணையாளர் நா.நடராஜன், துணை ஆணையர் அ.இரா.பிரகாஷ், உதவி ஆணையர் சு.லட்சுமி, அறங்காவலர்கள் கே.எம்.சுப்பிரமணியன், ச.மணிமாறன், ரா.ராஜசேகரன், கே.சத்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு,

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள வெளித்துறை பணியிடங்கள், தொழில்நுட்ப பணியிடங்கள், ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உள்துறை பணியிடங்களில் கீழ்காணும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியுடைய 18 முதல் 45 வயது நிரம்பிய இந்து மதத்தைச் சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளித்துறை காலி பணியிடங்கள்

 

பழனி கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பழனி கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பழனி கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தொழில் நுட்ப காலி பணியிடங்கள்

 

பழனி கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பழனி கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பழனி கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பழனி கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பழனி கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பழனி கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பழனி கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஆசிரியர் காலி பணியிடங்கள்

பழனி கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

உள்துறை காலி பணியிடங்கள்

பழனி கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பழனி கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

விண்ணப்ப படிவம், தகுதிகள் மற்றும் இதர விவரங்கள் http://www.hrce.tn.gov.in மற்றும் http://www.palanimurugan.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பங்களை உரிய பூர்த்தி செய்யப்பட்ட தகுதிச்சான்றுகளுடன் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ 3.3.2023 தேதி முதல் 7.4.2023 தேதி வரை மாலை 5.45 மணிக்குள் திருக்கோயில் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். மேற்படி தேதிக்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி.-

இணை ஆணையர்/செயல் அலவலர்,
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
பழனி -624 601,
திண்டுக்கல் மாவட்டம்.

பழனி கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

நிபந்தனைகள்:-

1. விண்ணப்பதாரர் 1.7.2022ம் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

See also  10 நாட்களுக்கு மாலை 5 மணிக்கு மேல் கடைகள் மூடப்படும்

2. இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

3. ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.

4. இவ்விளம்பரம் செய்யப்பட்ட தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

5. விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் கூடுதல் கல்வித் தகுதிக்கான சான்றிதழ்கள் மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் (Attested Xerox copy only) பெற்று அனுப்பப்பட வேண்டும்.

6. விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று ஆவணம் அல்லது கல்வி நிலையத்தால் வழங்கப்பபட்ட மாற்று சான்றிதழ் (Transfer Certificate) நகல் இணைக்கப்பட வேண்டும்.

7. விண்ணப்ப படிவத்தில் விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலும், கேட்கப்பட்ட சான்று நகல்கள் இணைக்கப்படாமலும், பெறப்படும் விண்ணப்பங்கள் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்படும்.

8. தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர் இத்திருக்கோயிலின் உபகோயில்களுக்கும், மாறுதல் செய்யப்படுவார்.

9. பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர் பணியில் சேர வரும் நேரத்தில் விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்ற சான்றிதழ் மற்றும் உடல் தகுதி சான்றிதழ்களின் அசல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

10.விண்ணப்பங்களை அனுப்பும் போது மேல் உறையின் மீது பதவியின் பெயரை குறிப்பிட்டு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.

See also  பி.சி.¸எம்.பி.சி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

11. நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்கு எவ்வித பயணப்படியும், வழங்கப்படமாட்டாது.

12. விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் கல்வி தகுதி மற்றும் பிற தகுதிக்குரிய ஆவணங்களின் அசல் சான்றிதழ்கள் நேர்முக தேர்வின் போது கண்டிப்பாக கொண்டு வரப்பட வேண்டும்.

தவறான தகவல் தந்தால் குற்றவியல் நடவடிக்கை

13. விண்ணப்பதாரரால் தெரிவிக்கப்படும் விவரங்கள் அனைத்தும் சரியானவை என உறுதியளிக்க வேண்டும். தவறான தகவல்கள் அல்லது போலியான ஆவணங்கள் ஏதேனும் அளித்து பணி நியமன ஆணை பெறப்படும் பட்சத்தில் எவ்வித முன்
அறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்தும், சட்ட ரீதியான குற்றவியல் நடவடிக்கைகளுக்குள் உட்படுத்தப்படுவர்.

14. நிர்ணயிக்கப்பட்ட காலகெடுவிற்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். மேலும், தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே பரிசீலனைக்கு பின்னர் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவர். தகுதி இல்லாத விண்ணப்பங்களுக்கு திருக்கோயிலிருந்து எவ்வித தகவலும் அனுப்பப்படமாட்டாது.

15. விண்ணப்பதாரர்களால் வழங்கப்படும் சான்றுகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட துறைகளின் மூலம் உண்மைத் தன்மை குறித்து பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

16. திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள், அவர்களின் வாரிசுதாரர்கள், அரசு பணி மற்றும் பொது நிறுவனங்கள், இதர திருக்கோயில்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

17. உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் காரணம் தெரிவிக்கப்படாமல் நிராகரிக்கப்படும்.

18. பணிநியமனம் அரசாணை எண்.114 சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அ.நி.4-2) நாள். 03.09.2020 விதிகளுக்குட்பட்டது. அரசணை எண்.219 சுற்றுலா, பண்பாடு அறநிலையங்கள் (அ.நி.4-2) நாள்.02.09.2022  விதிகளுக்குட்பட்டது.

See also  கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு நேர்காணல்

19. அரசாணை (நிலை) எண். 114 சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அ.நி.4- 2) நாள். 03.09.2020 விதி எண் 9-ன்படி முதுநிலை அல்லாத திருக்கோயில்களில் பணிபுரியும் தகுதியான பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

20. தேர்வு முறையானது அடிப்படை கல்வித் தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வுகள் கூடுதல் தகுதி மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்.

7ந் தேதி கடைசி நாள்

21. விண்ணப்ப படிவத்தினை http://www.hrce.tn.gov.in மற்றும் http://www.palanimurugan.hrce.tn.gov.inஎன்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் விண்ணப்பத்தினை ரூ.50/- செலுத்தி அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

22. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன், அஞ்சல் உறையில் பணியிட வரிசை எண் மற்றும்  பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு ‘இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி, திண்டுக்கல் மாவட்டம் – 624 601’ என்ற முகவரிக்கு நேரிலோ/அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.

23. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 07.04.2023 பிற்பகல் 5.45 மணிக்குள்.

இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!